Firefox-ல் தமிழில் தட்டச்சு செயவது மிகவும் எளிதானதாகும்.
Firefox-ல் தமிழில் தட்டச்சு செய்ய Google translator-ஐ எல்லாம் தேட வேண்டியதில்லை. Firefox add-ons நமது உதவிக்கு உள்ளது. முதலில் கீழ் கண்ட முகவரியில் உள்ள Firefox add-ons-க்கு செல்லுங்கள்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994
அப்போது கீழ் கண்டவாறு திரை கிடைக்கும்.அதில் உள்ள
என்னும் buttoan-ஐ சொடுக்கினால் கீழ் கண்டவாறு திரை தோன்றும்.
அதை ஏற்றுக் கொண்டு அதை சுடுக்கினால் தமிழ் விசை add-on install ஆகும். Install ஆனவுடன் firefox-ஐ மறுதொடக்கம் செய்தால் தமிழ் விசை பயன்பட்டிற்கு வந்துவிடும். இதை உபயோகித்து firefox-இல் வரும் அனைத்து text box-லும் இதை உபயோக படுத்தலாம். Text-box-இல் cursor-ஐ வைத்து right click செய்தால் கீழ் கண்டவாறு context menu கிடைக்கும்.அதில் அஞ்சல், தமிழ் 99, பாமினி, பழைய தட்டச்சு, புதிய தட்டச்சு, இன்ஸ்க்ரிப்ட், அவ்வை என்று தமிழ் தட்டச்சு முறைகளும் மற்றும் ஆங்கிலமும் இருக்கும். இதில் உங்களுக்கு பழக்கமுள்ள மற்றும் விருப்பமான முறைக்கு சுலபமாக மாறிக் கொள்ளலாம். அதன் பின்னர் தமிழில் தட்டச்சு செய்ய ஆரம்பிக்க வேண்டியதுதான். ஆங்கில தட்டச்சு முறைக்கு மாறவும் இதே முறையில் right click செய்து ஆங்கிலம் என்று தெரிவு செய்தால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து கொள்ளலாம். சுருக்கு விசைகளை பயன்படுத்தியும் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு முறைகளுக்கு சுலபமாக மாறி கொள்ளலாம்.
இதிலேயே தெரிவுகள் என்பதை தேர்வு செய்தால் கீழ் கண்ட பட்டியல் கிடைக்கும்.
இதில் உங்களுக்கு பிடித்த தட்டச்சு முறைகளையும் மற்றும் சுருக்கு விசைகளையும் தேர்வு செய்து கொள்ளலாம்.