சிறந்த வருமான வாய்ப்பு

இது தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்.

உங்கள் வீட்டுக்கு மாதம் ரூ.1000-க்கு குறையாமல் மளிகைப் பொருட்கள் வாங்குங்கள், ரூ.250 சேமியுங்கள். அத்துடன் சிறந்த வருமான வாய்ப்பையும் பெறுங்கள்.

அலைபேசி-9043584331

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

சூரத் நகரில் கருப்பு நிற மழை

குஜராத்தில் மாநிலத்தில் உள்ள சூரத் ஒரு சிறந்த தொழில் நகரம் ஆகும். இந்நகரம் ஆடைகள் மற்றும் வைரத் தொழில் ஆகியவற்றுக்கு உலகப்புகழ் பெற்றது ஆகும்.

இங்கு நேற்று முன்தினம் திடீரென மழை பெய்தது.சிறிது நேரத்தில் மழை கருப்பு நிறத்தில் பெய்ய ஆரம்பித்தது. சூரத் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளிமண்டலத்தில் அமிலத்தன்மை அதிகரிக்கும்போது இதுபோல கருப்பு மழை பெய்ய வாய்ப்பு உண்டு. சூரத்தில் ஜவுளி, சாய தொழில்கள் நடப்பதால் இதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று குஜராத் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், கருப்பு மழை பெய்ததாக தங்களுக்கு தகவல் வரவில்லை என்றும் கூறினர்.

இதற்கிடையே கருப்பு மழை நீர் பரிசோதிக்கப்பட்டது. அதில் அமிலத்தன்மை இல்லை என்று தெரியவந்துள்ளது. மழை நீரின் நிறம் ஏன் கருப்பானது என்று ஆராய்ச்சி நடந்து வருகிறது.

மறக்காம வோட்டுப் போடுங்க