இங்கு நேற்று முன்தினம் திடீரென மழை பெய்தது.சிறிது நேரத்தில் மழை கருப்பு நிறத்தில் பெய்ய ஆரம்பித்தது. சூரத் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வளிமண்டலத்தில் அமிலத்தன்மை அதிகரிக்கும்போது இதுபோல கருப்பு மழை பெய்ய வாய்ப்பு உண்டு. சூரத்தில் ஜவுளி, சாய தொழில்கள் நடப்பதால் இதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று குஜராத் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், கருப்பு மழை பெய்ததாக தங்களுக்கு தகவல் வரவில்லை என்றும் கூறினர்.
இதற்கிடையே கருப்பு மழை நீர் பரிசோதிக்கப்பட்டது. அதில் அமிலத்தன்மை இல்லை என்று தெரியவந்துள்ளது. மழை நீரின் நிறம் ஏன் கருப்பானது என்று ஆராய்ச்சி நடந்து வருகிறது.
2 கருத்துகள்:
சுற்றுச்சூழல் மீது அக்கறையில்லை. திருப்பூரிலும் இது போன்று மழைப்பொழியலாம். பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்
மதுரை சரவணன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கருத்துரையிடுக