சிறந்த வருமான வாய்ப்பு

இது தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்.

உங்கள் வீட்டுக்கு மாதம் ரூ.1000-க்கு குறையாமல் மளிகைப் பொருட்கள் வாங்குங்கள், ரூ.250 சேமியுங்கள். அத்துடன் சிறந்த வருமான வாய்ப்பையும் பெறுங்கள்.

அலைபேசி-9043584331

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

உங்கள் கண்களை ஏமாற்றும் மாயப் புகைப்படங்கள்

தண்ணீர் செல்லும் பாதையை கவனியுங்கள்

கருப்புப் புள்ளிகளை எண்ணிச் சொல்லுங்கள்

படத்தில் கிடைமட்ட கோடுகள் நேராக உள்ளதா? சாய்வாக உள்ளதா?
எல்லாமே நேர்க்கோடுகள்தான். ஒவ்வொரு பட்டையாக தனித்தனியாக பார்க்கவும்.


வட்டத்தின் நடுவே வரையப்பட்டுள்ள சதுரம் நேராக உள்ளதா? வளைந்துள்ளதா?
படத்தில் உள்ளது நேர்க்கோட்டு சதுரம்தான். நம்ப முடியவில்லையென்றால் ஏதேனும் ஒரு பக்கத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் கோனத்திலேயே பார்க்கவும்.


முடிவில்லாமல் ஏறியிறங்கும் மாடிப்படிகள்

மறக்காம வோட்டுப் போடுங்க


வியாழன், 26 ஆகஸ்ட், 2010

அணு விபத்து இழப்பீடு மசோதா – என்னதான் நடந்தது?

அமெரிக்கா, இந்தியா இடையே 2008ல் ஏற்பட்ட சிவில் அணு ஒப்பந்தத்தை அமல்படுத்த, அணு உலை விபத்து இழப்பீடு மசோதாவை இந்தியா நிறைவேற்ற வேண்டும். அதன்படி, நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் 8ம் தேதி இந்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில் உள்ள பல்வேறு அம்சங்கள் இந்தியாவுக்கு பாதகமாக இருப்பதாக பா.ஜ., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அணு சக்தி நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்படும் மக்களுக்கு இழப்பீடு அளிப்பதற்காக ரூ.500 கோடி முன்வைப்பு தொகையை செலுத்த வேண்டும் என்று மசோதாவில் கூறப்பட்டு இருக்கிறது. மேலும், அணு சக்தி நிலையம் அமைப்பதற்கான மூலப்பொருட்களை சப்ளை செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த மசோதாவில் சேர்க்கப்படாமல் உள்ளன.

ஆகவே நம் நாட்டு மக்களின் நலன் காக்கும் பொருட்டு இந்த இரண்டு அம்சங்களையும் திருத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதாவது, ரூ.500 கோடி முன்வைப்புத் தொகையை ரூ.1,500 கோடியாக உயர்த்த வேண்டும் என்றும், அணு நிலையம் அமைப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களையும், உற்பத்தியாளர்களையும் இந்த மசோதாவின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளிக்கப்படும் வரை, அணு உலை செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும் கூறின.

இதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு இம்மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பியது. காங்கிரஸ் எம்.பி. சுப்பிராம ரெட்டி தலைமையிலான நிலைக்குழு இதை ஆராய்ந்து சமர்பித்த அறிக்கை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை இந்தியாவே நிறைவேற்றுவதால், நம் நாட்டின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இது இருக்க வேண்டும் என்று நிலைக்குழுவின் அறிக்கையில் ஒருமனதாக கூறப்பட்டு உள்ளது.

அணுவிபத்து நஷ்ட ஈட்டு மசோதாவில் எதிர்க்கட்சிகள் கேட்டபடியே திருத்தங்களைச் செய்த அரசு, அத்துடன் புதிய பிரிவைச் சேர்த்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளையே நீர்த்துப் போகச் செய்துவிட்டது.

அணுஉலைகளிலோ நிலையங்களிலோ விபத்து நேரிட்டால் அவற்றை தயாரித்து, விற்பனை செய்த வெளிநாட்டு நிறுவனங்கள்தான் பொறுப்பு என்கிற நிபந்தனையில், வேண்டுமென்றே தரக்குறைவான கருவிகளையும் பாகங்களையும் அவர்கள் விற்பனை செய்திருந்தால் மட்டுமே அவர்களைப் பொறுப்பாகக் கருதி நஷ்ட ஈடு பெற வேண்டும் என்று புதிய திருத்தம் தெரிவிக்கிறது.

அதாவது அணு உலைகளில் விபத்த நடந்தால் அத்தகைய விபத்து நடக்கவேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் அணு உலை சாதனத்தை வழங்கிய அன்னிய நிறுவனம் செயல்பட்டுள்ளது என்பதை நிரூபித்தால் மட்டுமே அதனிடம் இழப்பீடு கோரமுடியும் என்கிறது.

அத்துடன் அணுமின் நிலையங்கள் அரசு நிறுவனங்களாகத் தொடங்கப்படுவதால் நஷ்ட ஈட்டை அளிக்கும் பொறுப்பை அரசு ஏற்கிறது என்றும் திருத்தப்பட்ட மசோதாவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பிற்காலத்தில் இந்த அணுமின் நிலையங்களில் உள்ள அரசின் பங்கு தனியாருக்கு விற்கப்படமாட்டாது என்று எந்தவித உத்தரவாதமும் தரப்படவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

நாட்டை அமெரிக்க அணு உலை முதலாளிகளிடம் அடகு வைக்க காங்கிரஸ் அரசாங்கம் வேகமாக வரிந்துக் கட்டிய போதும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் இந்த திருத்தத்தை நீக்க மத்திய காங்கிரஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

அதன் படி Aug 26,2010 அன்று மசோதாவை தாக்கல் செய்து விட்டார்கள்.

மறக்காம வோட்டுப் போடுங்க


திங்கள், 16 ஆகஸ்ட், 2010

ஃபயர்ஃபாக்ஸி(Firefox Browser)ன் வேகத்தை அதிகப்படுத்த டிப்ஸ்

ஃபயர்ஃபாக்ஸி(Firefox Browser)ன் வேகத்தை அதிகப்படுத்த 12 டிப்ஸ்கள் கொடுத்துள்ளேன். பயன் படுத்தி பாருங்கள்.

முக்கிய குறிப்பு: மாற்றங்களை செய்வதற்கு முன்பு ஃபயர்ஃபாக்ஸ் ப்ரொபைலை பேக்அப் எடுத்துக் கொள்வது நல்லது. அதற்கு கீழ்க்கண்ட ஃபயர்ஃபாக்ஸ் ஆட்ஆன் உதவும்.

1. அட்ரஸ் பாரில் about:config என்று கொடுத்து என்டர் தட்டவும். தட்டியவுடன் கீழ்க்கண்டவாறு மெஸ்ஸேஜ் தோன்றும்.
இதில் I'll be care full, I promise! என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

2. இப்போது கீழே உள்ளது போல் ஃபில்டர் சர்ச் பார் தோன்றும்.
இதில் network.http.pipelining என்று டைப் செய்தால் அதன் மதிப்புகள்  தோன்றும். வேல்யூ ஃபீல்டில் ஃபால்ஸ்(False) என்று இருந்தால் டபுள் க்ளிக் செய்து அதை ட்ரூ(True) என்று மாற்ற வேண்டும்.

3. இப்போது ஃபில்டர் சர்ச் பாரில் network.http.pipelining.maxrequests என்று டைப் செய்து வருவதில் டபுள் க்ளிக் செய்து அதன் மதிப்பை 8 என மாற்ற வேண்டும்.

4. இப்போது ஃபில்டர் சர்ச் பாரில் network.http.proxy.pipelining என்று டைப் செய்து அதன் மதிப்பை ட்ரூ(True) என மாற்ற வேண்டும்.

5. இப்போது ஃபில்டர் சர்ச் பாரில் network.dns.disableIPv6 என்று டைப் செய்து அதன் மதிப்பை ட்ரூ(True) என மாற்ற வேண்டும்.

6. இப்போது புதிதாக ஒரு கன்ட்ரோல்-ஐ உருவாக்க வேண்டும். அதற்கு இப்போது உள்ள விண்டோவிலேயே ஏதேனும் ஒரு இடத்தில் ரைட் க்ளிக் செய்தால் வரும் பாப் அப் மெனுவில் உள்ள நியூ என்பதையும் பின்னர் பூலியன் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும். இப்போது தோன்றும் பாக்ஸில் content.interrupt.parsing என்று கொடுத்து ok கொடுத்தால் அதன் வேல்யூ செட் செய்யும் பாக்ஸ் வரும். அதில் ட்ரூ(True) என்பதை தேர்வு செய்து பின்னர் ok குடுக்க வேண்டும்.

7. இப்போது இன்னொரு கன்ட்ரோல்-ஐ புதிதாக உருவாக்க வேண்டும். ரைட் க்ளிக் செய்து அதில் நியூ அதன் பின்னர் இன்டிஜர் என்பதை தெரிவு செய்ய வேண்டும். தோன்றும் பாப் அப் விண்டொவில் content.max.tokenizing.time என்று டைப் செய்து ok கொடுக்க வேண்டும். இப்போது வரும் பாப் அப் விண்டொவில் 2250000 என்று டைப் செய்து ok கொடுக்க வேண்டும்.

8. மேலே கண்ட வழிமுறை 7-இல் உள்ளவாறு இண்டிஜர் என்பதை தெரிவு செய்து வரும் பாப் அப் விண்டோவில் content.notify.interval என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும். தோன்றும் பாப் அப் விண்டோவில் 750000 என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும்.

9. மேலே கண்ட வழிமுறையி 6ன் படி புதிதாக ஒரு பூலியன் கண்ட்ரோலை உருவாக்க வேண்டும். அதன் பெயராக content.notify.ontimer என்று கொடுத்து அதன் மதிப்பாக ட்ரூ(true) என்று கொடுக்க வேண்டும்.

10. மேலே கண்ட வழிமுறை 7-இல் உள்ளவாறு இண்டிஜர் என்பதை தெரிவு செய்து வரும் பாப் அப் விண்டோவில் content.notify.backoffcount என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும். தோன்றும் பாப் அப் விண்டோவில் 5 என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும்.

11. மேலே கண்ட வழிமுறை 7-இல் உள்ளவாறு இண்டிஜர் என்பதை தெரிவு செய்து வரும் பாப் அப் விண்டோவில் content.switch.threshold என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும். தோன்றும் பாப் அப் விண்டோவில் 750000 என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும்.

12. மேலே கண்ட வழிமுறை 7-இல் உள்ளவாறு இண்டிஜர் என்பதை தெரிவு செய்து வரும் பாப் அப் விண்டோவில் nglayout.initialpaint.delay என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும். தோன்றும் பாப் அப் விண்டோவில் 0 என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும்.

அவ்வளவுதான் முடிந்தது. இப்போது ஃபயர்ஃபாக்ஸை ரீஸ்டார்ட் செய்யுங்கள். வேகம் அதிகமாகியிருப்பதை உணர்வீர்கள்.

மறக்காம வோட்டுப் போடுங்க


செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

சாரு நிவேதிதாவுக்கு ஒரு கண்டனம்

தன்னுடைய charuonline.com என்ற தளத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்… என்ற தலைப்பில் கீழே கண்டவாறு திருவாய் மலர்ந்திருக்கிறார் எழுத்தாளர் சாருலதா நிவேதிதா.

பாலாவுக்கு,

தமிழில் எழுத்துக் கூட்டி நாலு வாக்கியம் எழுதத் தெரிகிறதா, உடனே ஒரு வலைப்பூ ஆரம்பித்து ஒரு சினிமா விமர்சனமும் எழுதி இங்கே எழுத்தாளன் ஆகி விடலாம். அதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. அதைக் கொஞ்சம் வெளியில் தெரிய வைக்கவே அந்த லிங்கைக் கொடுத்தேன்.

சாரு

இதை சொல்றதுக்கு இவர் யாருன்னுதான் புரியல. நித்தியானந்தா விவகாரத்துல விஜய் டீவியிலெ மன்னிப்பு கேட்டுட்டு அப்புறம் என்னை வலுக்கட்டாயமா மன்னிப்பு கேட்க வெச்சுட்டாங்கன்னு தன்னோட ப்ளாக்ல வீராவேசமா பதிவு போட்ட மாவீரர்தானே இவர். ஒருத்தர் எழுத்தாளனா இல்லையான்னு தீர்மானம் பன்ன வேண்டியவங்க வாசகர்கள்தான்.
நல்லாயிருந்தா ஆதரவு கொடுக்கப் போறாங்க, இல்லைன்னா குப்பையிலே தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருப்பாங்க.

ஒரு படத்துலே காமெடியன் ஹீரோகிட்டே சொல்வாரு, நேத்து வந்த சின்ன பசங்க எல்லாம் பன்ச் டயலாக் சொல்றாங்க, அதனாலே இந்த தடவை நான் சொல்றேன்னு சொல்வாரு.

நிஜமாவே சின்ன பையனை பசங்க படத்துல பன்ச் டயலாக் சொல்ல வெச்சாங்க. அது நல்லா இல்லாம போயிருச்சா.

ஒரு ஹீரோவை பன்ச் டயலாக் சொல்ல வைக்கிறது இயக்குனரோட விருப்பம், அதை ஏத்துக்கிறது ரசிகர்களோட விருப்பம். அதே மாதிரி எழுத்தாளனை ஏத்துக்கிறது, ஏத்துக்காதது வாசகர்கள் விருப்பம். நடவுல இவங்க யாரு இதுக்கெல்லாம் நாட்டாமை.

மறக்காம வோட்டுப் போடுங்க


திங்கள், 2 ஆகஸ்ட், 2010

தற்காலிக ஈமெயில் முகவரி

Temporary Email ID

நாம் பல சமயங்களில் பல்வேறுத் தளங்களுக்கு செல்கிறோம். அத்தளங்களில் இணைய நம்முடைய ஈமெயில் முகவரியை பதிவு செய்யச் சொல்வார்கள். அத்தளம் நம்பகமானதுதானா என்று நமக்கு தெரியாது.

அதே போல் பல தளங்களில் செய்திகளை படித்துவிட்டு அதற்கு பின்னூட்டம் இட விரும்புவோம். அதற்கு ஈமெயில் முகவரியை கேட்பார்கள். நம்முடைய அசல் ஈமெயில் ஐடியை கொடுக்க மனம் வராது.

இது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்வது தற்காலிக ஈமெயில் முகவரிகளாகும். இதில் பல வகைகள் உள்ளன. 10 நிமிடம் முதல் நாம் விரும்பும் நாட்கள் வரை. அதன் பிறகு அந்த ஈமெயில் முகவரி தானாகவே எக்ஸ்ஃபயர் ஆகிவிடும்.

இங்கே சில தற்காலிக ஈமெயில் முகவரி தரும் தளங்களை அளித்துள்ளேன்.

1. guerrillamail

2. mailinator

3. spambox

மறக்காம வோட்டுப் போடுங்க