முக்கிய குறிப்பு: மாற்றங்களை செய்வதற்கு முன்பு ஃபயர்ஃபாக்ஸ் ப்ரொபைலை பேக்அப் எடுத்துக் கொள்வது நல்லது. அதற்கு கீழ்க்கண்ட ஃபயர்ஃபாக்ஸ் ஆட்ஆன் உதவும்.
1. அட்ரஸ் பாரில் about:config என்று கொடுத்து என்டர் தட்டவும். தட்டியவுடன் கீழ்க்கண்டவாறு மெஸ்ஸேஜ் தோன்றும்.
இதில் I'll be care full, I promise! என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
2. இப்போது கீழே உள்ளது போல் ஃபில்டர் சர்ச் பார் தோன்றும்.
இதில் network.http.pipelining என்று டைப் செய்தால் அதன் மதிப்புகள் தோன்றும். வேல்யூ ஃபீல்டில் ஃபால்ஸ்(False) என்று இருந்தால் டபுள் க்ளிக் செய்து அதை ட்ரூ(True) என்று மாற்ற வேண்டும்.
3. இப்போது ஃபில்டர் சர்ச் பாரில் network.http.pipelining.maxrequests என்று டைப் செய்து வருவதில் டபுள் க்ளிக் செய்து அதன் மதிப்பை 8 என மாற்ற வேண்டும்.
4. இப்போது ஃபில்டர் சர்ச் பாரில் network.http.proxy.pipelining என்று டைப் செய்து அதன் மதிப்பை ட்ரூ(True) என மாற்ற வேண்டும்.
5. இப்போது ஃபில்டர் சர்ச் பாரில் network.dns.disableIPv6 என்று டைப் செய்து அதன் மதிப்பை ட்ரூ(True) என மாற்ற வேண்டும்.
6. இப்போது புதிதாக ஒரு கன்ட்ரோல்-ஐ உருவாக்க வேண்டும். அதற்கு இப்போது உள்ள விண்டோவிலேயே ஏதேனும் ஒரு இடத்தில் ரைட் க்ளிக் செய்தால் வரும் பாப் அப் மெனுவில் உள்ள நியூ என்பதையும் பின்னர் பூலியன் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும். இப்போது தோன்றும் பாக்ஸில் content.interrupt.parsing என்று கொடுத்து ok கொடுத்தால் அதன் வேல்யூ செட் செய்யும் பாக்ஸ் வரும். அதில் ட்ரூ(True) என்பதை தேர்வு செய்து பின்னர் ok குடுக்க வேண்டும்.
7. இப்போது இன்னொரு கன்ட்ரோல்-ஐ புதிதாக உருவாக்க வேண்டும். ரைட் க்ளிக் செய்து அதில் நியூ அதன் பின்னர் இன்டிஜர் என்பதை தெரிவு செய்ய வேண்டும். தோன்றும் பாப் அப் விண்டொவில் content.max.tokenizing.time என்று டைப் செய்து ok கொடுக்க வேண்டும். இப்போது வரும் பாப் அப் விண்டொவில் 2250000 என்று டைப் செய்து ok கொடுக்க வேண்டும்.
8. மேலே கண்ட வழிமுறை 7-இல் உள்ளவாறு இண்டிஜர் என்பதை தெரிவு செய்து வரும் பாப் அப் விண்டோவில் content.notify.interval என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும். தோன்றும் பாப் அப் விண்டோவில் 750000 என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும்.
9. மேலே கண்ட வழிமுறையி 6ன் படி புதிதாக ஒரு பூலியன் கண்ட்ரோலை உருவாக்க வேண்டும். அதன் பெயராக content.notify.ontimer என்று கொடுத்து அதன் மதிப்பாக ட்ரூ(true) என்று கொடுக்க வேண்டும்.
10. மேலே கண்ட வழிமுறை 7-இல் உள்ளவாறு இண்டிஜர் என்பதை தெரிவு செய்து வரும் பாப் அப் விண்டோவில் content.notify.backoffcount என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும். தோன்றும் பாப் அப் விண்டோவில் 5 என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும்.
11. மேலே கண்ட வழிமுறை 7-இல் உள்ளவாறு இண்டிஜர் என்பதை தெரிவு செய்து வரும் பாப் அப் விண்டோவில் content.switch.threshold என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும். தோன்றும் பாப் அப் விண்டோவில் 750000 என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும்.
12. மேலே கண்ட வழிமுறை 7-இல் உள்ளவாறு இண்டிஜர் என்பதை தெரிவு செய்து வரும் பாப் அப் விண்டோவில் nglayout.initialpaint.delay என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும். தோன்றும் பாப் அப் விண்டோவில் 0 என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் முடிந்தது. இப்போது ஃபயர்ஃபாக்ஸை ரீஸ்டார்ட் செய்யுங்கள். வேகம் அதிகமாகியிருப்பதை உணர்வீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக