சிறந்த வருமான வாய்ப்பு

இது தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்.

உங்கள் வீட்டுக்கு மாதம் ரூ.1000-க்கு குறையாமல் மளிகைப் பொருட்கள் வாங்குங்கள், ரூ.250 சேமியுங்கள். அத்துடன் சிறந்த வருமான வாய்ப்பையும் பெறுங்கள்.

அலைபேசி-9043584331
தமிழ் எழுத்தாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் எழுத்தாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

சாரு நிவேதிதாவுக்கு ஒரு கண்டனம்

தன்னுடைய charuonline.com என்ற தளத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்… என்ற தலைப்பில் கீழே கண்டவாறு திருவாய் மலர்ந்திருக்கிறார் எழுத்தாளர் சாருலதா நிவேதிதா.

பாலாவுக்கு,

தமிழில் எழுத்துக் கூட்டி நாலு வாக்கியம் எழுதத் தெரிகிறதா, உடனே ஒரு வலைப்பூ ஆரம்பித்து ஒரு சினிமா விமர்சனமும் எழுதி இங்கே எழுத்தாளன் ஆகி விடலாம். அதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. அதைக் கொஞ்சம் வெளியில் தெரிய வைக்கவே அந்த லிங்கைக் கொடுத்தேன்.

சாரு

இதை சொல்றதுக்கு இவர் யாருன்னுதான் புரியல. நித்தியானந்தா விவகாரத்துல விஜய் டீவியிலெ மன்னிப்பு கேட்டுட்டு அப்புறம் என்னை வலுக்கட்டாயமா மன்னிப்பு கேட்க வெச்சுட்டாங்கன்னு தன்னோட ப்ளாக்ல வீராவேசமா பதிவு போட்ட மாவீரர்தானே இவர். ஒருத்தர் எழுத்தாளனா இல்லையான்னு தீர்மானம் பன்ன வேண்டியவங்க வாசகர்கள்தான்.
நல்லாயிருந்தா ஆதரவு கொடுக்கப் போறாங்க, இல்லைன்னா குப்பையிலே தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருப்பாங்க.

ஒரு படத்துலே காமெடியன் ஹீரோகிட்டே சொல்வாரு, நேத்து வந்த சின்ன பசங்க எல்லாம் பன்ச் டயலாக் சொல்றாங்க, அதனாலே இந்த தடவை நான் சொல்றேன்னு சொல்வாரு.

நிஜமாவே சின்ன பையனை பசங்க படத்துல பன்ச் டயலாக் சொல்ல வெச்சாங்க. அது நல்லா இல்லாம போயிருச்சா.

ஒரு ஹீரோவை பன்ச் டயலாக் சொல்ல வைக்கிறது இயக்குனரோட விருப்பம், அதை ஏத்துக்கிறது ரசிகர்களோட விருப்பம். அதே மாதிரி எழுத்தாளனை ஏத்துக்கிறது, ஏத்துக்காதது வாசகர்கள் விருப்பம். நடவுல இவங்க யாரு இதுக்கெல்லாம் நாட்டாமை.

மறக்காம வோட்டுப் போடுங்க