ஆங்கிலம் செயப்பாட்டுவினை (Passive Voice)
உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்று நாம் செயப்பாட்டுவினை (Passive Voice) வாக்கிய அமைப்புக்களின் பயன்பாட்டைப் பார்ப்போம்.சாதாரண செயல்வினை வாக்கியங்களில் எழுவாய் (Subject) வாக்கியத்தின் ஆரம்பத்தில் வரும். ஆனால் செயப்பாட்டுவினை வாக்கியங்கள் அவ்வாறு அல்லாமல் செயப்படுபொருளே (Object) வாக்கியத்தின் ஆரம்பத்தில் தோன்றும். அதேவேளை வாக்கியத்தின் பிரதான வினைசொல்லாக Past Participle சொற்களே எப்பொழுதும் பயன்படும்.
எடுத்துக்காட்டாக:
Sarmilan is doing a job.
சர்மிலன் செய்துக்கொண்டிருக்கின்றான் ஒரு வேலை.
(The) Job is done by Sarmilan.
வேலையை செய்யப்படுகிறது சர்மிலனால்.
(சர்மிலனால் வேலை செய்யப்படுகிறது.)
இவற்றை மிகவும் எளிதாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இலக்கண வாக்கிய அமைவுகள் (Grammar Patterns) ஊடாக பயிற்சிப்பெறலாம்.
உச்சரிப்பு பயிற்சி பெறவிரும்புவோர் ஒலி கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம்.
1. It is done.
இதை செய்யப்படுகிறது.
2. It is being done.
இதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.
3. It was done.
இதை செய்யப்பட்டது.
4. It was being done.
இதை செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.
5. It will be done.
இதை செய்யப்படும்.
6. It will be being done.
இதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும்.
7. It would be done.
இதை செய்யப்பட்டிருக்கும்.
8. It would be being done.
இதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும்.
9. It is not done.
இதை செய்யப்படுகிறதில்லை.
10. It wasn’t done. (was + not)
இதை செய்யப்படவில்லை
11. It won't be done. (will + not)
இதை செய்யப்பட மாட்டாது.
12. It has been done.
இதை (சில காலமாக/ சற்று முன்பிலிருந்து) செய்யப்படுகிறது.
13. It has been being done.
இதை (சில காலமாக/ சற்று முன்பிலிருந்து) செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
14. It had been done.
இதை (அக்காலத்திலிருந்து/ அன்றுமுதல்) செய்யப்பட்டது.
15. It had been being done.
இதை (அக்காலத்திலிருந்து/ அன்றுமுதல்) செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.
16. It will have been done.
இதை (ஒரு குறிப்பிட்ட காலம் வரை) செய்யப்படும்.
17. It will have been being done.
இதை (ஒரு குறிப்பிட்ட காலம் வரை) செய்யப்பட்டுக்கொண்டிருக்கும்.
18. It is to be done.
இதை செய்ய நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
19. It was to be done.
இதை செய்ய நிச்சயிக்கப்பட்டது.
20. It is going to be done.
இதை செய்யப்படப் போகின்றது.
21. It was going to be done.
இதை செய்யப்படப் போனது.
22. It can be done.
இதை செய்ய முடியும்.
23. It can't be done.
இதை செய்ய முடியாது.
24. It could be done.
இதை செய்ய முடிந்தது.
25. It couldn't be done.
இதை செய்ய முடியவில்லை.
26. It must be done.
இதை (நிச்சயமாக) செய்யப்பட வேண்டும்.
27. It must not be done.
இதை (நிச்சயமாக) செய்யப்பட கூடாது.
28. It should be done.
இதை செய்யப்படவே வேண்டும்.
29. It shouldn’t be done.
இதை செய்யப்படவே கூடாது.
30. It ought to be done.
இதை எப்படியும் செய்யப்படவே வேண்டும்.
31. It has to be done.
இதை செய்யப்பட வேண்டும்.
32. It doesn't have to be done.
இதை செய்யப்படவேண்டிய அவசியமில்லை.
33. It had to be done.
இதை செய்யப்படவேண்டி ஏற்பட்டது/இருக்கும்.
34. It didn't have to be done.
இதை செய்யப்படவேண்டி ஏற்படவில்லை/இருக்கவில்லை.
35. It will have to be done.
இதை செய்யப்படவேண்டி ஏற்படும்/இருக்கும்.
36. It won’t have to be done.
இதை செய்யப்பட வேண்டி ஏற்படாது/இருக்காது
37. It need be done.
இதை செய்வது அவசியம்.
38. It needn't be done.
இதை செய்யவேண்டிய அவசியமில்லை.
39. It may be done.
இதை செய்யப்படலாம்.
40. It may have been done.
இதை செய்யப்பட்டிருக்கலாம்.
41. It must have been done.
இதை நிச்சயமாக செய்யப்பட்டிருக்க வேண்டும்.
42. It would have been done.
இதை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
43. It wouldn't have been done.
இதை செய்யப்பட்டிருக்காது.
44. It could have been done.
இதை செய்திருக்க இருந்தது. (ஆனால் செய்யவில்லை)
45. It should have been done.
இதை செய்திருக்கவே இருந்தது. (ஆனால் செய்யவில்லை)
46. It shouldn't have been done.
இதை செய்யாமலிருக்கவே இருந்தது. (அநியாயம் செய்தது)
47. It ought to have been done.
இதை எப்படியும் செய்திருக்கவே இருந்தது. (ஆனால் செய்யவில்லை)
செயப்பாட்டுவினை கற்கவேண்டியதன் முக்கியத்துவம்
1. ஆங்கில பத்திரிகைகளை இலகுவாக வாசித்து விளங்கிகொள்வதற்கு.
2. ஆங்கில அரச பதிவேடுகளை, கடிதங்களை எளிதாக வாசித்து விளங்கிகொள்வதற்கு.
3. வானொலி, தொலைக்காட்சி செய்திகளை புரிந்துக்கொள்வதற்கு.
4. ஆங்கில மொழியில் (உயர்கல்வி) பாடங்களை இலகுவாக விளங்கிக்கற்பதற்கு (கணிதம், கணினி, தொழில்நுட்பம் போன்றவை...)
5. ஆங்கில செயப்பாட்டுவினை வாக்கியங்களூடாக யாரும் உங்களுடன் உரையாடினால் அவற்றை எளிதாக விளங்கிக்கொள்வதற்கும் பேசுவதற்கும்.
செய்திகளில் செயப்பாட்டுவினை (Passive Voice) வாக்கியங்கள்
Hong Kong Island was occupied by British forces in 1841
ஹொங்கொங் தீவை ஆக்கிரமிக்கப்பட்டது பிரித்தானியப் படைகளால் 1841 இல்.
(1981 இல் ஹொங்கொங் தீவை பிரித்தானியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.)
A young female Tamil journalist was arrested by the Police on suspicion.
ஒரு இளம் தமிழ் பெண் பத்திரிக்கையாளரை கைதுசெய்யப்பட்டது பொலிஸாரால் சந்தேகத்தில்.
(இளம் தமிழ் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுச்செய்யப்பட்டது.)
Two decomposed bodies of Tamils were discovered on Friday.
இரண்டு சிதைவுற்ற தமிழர்களின் உடலங்களை கண்டுபிடிக்கப்பட்டது வெள்ளிக்கிழமை.
(சிதைவுற்ற நிலையில் தமிழர்களின் உடலங்கள் இரண்டை வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.)
Tamils were abducted by unidentified armed persons.
தமிழர்களை கடத்திச்செல்லப்பட்டது அடையாளம் காணப்படாத ஆயுததாரிகளால்.
(அடையாளம் காணப்படாத ஆயுததாரிகளால் தமிழர்கள் கடத்திச்செல்லப்பட்டது.)
An university Tamil girl was kidnapped on December 31 morning.
ஒரு பல்கலைக் கழக தமிழ் பெண்ணை கடத்தப்பட்டது டிசம்பர் 31 காலையில்.
(டிசம்பர் 31 ம் நாள் காலையில் பல்கலைக்கழக தமிழ் பெண் ஒருவரை கடத்தப்பட்டது.)
Navanethem Pillay was appointed as new United Nations High Commissioner for Human Rights.
நவநீதம் பிள்ளையை நியமிக்கப்பட்டது புதிய ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை உயர் ஆணையராக.
(நவநீதம் பிள்ளை அவர்களை புதிய ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை உயர் ஆணையராக நியமிக்கப்பட்டது.)
Barack Hussein Obama was elected President of the United States
பாரக் ஹுசேன் ஒபாமாவை தேர்ந்தெடுக்கப்பட்டது ஐக்கிய அமெரிக்காவின் சனாதிபதியாக.
(ஐக்கிய அமெரிக்காவின் சனாதிபதியாக பாரக் ஹுசேன் ஒபாமா அவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டது.)
Annathurai is considered an intellectual and a brilliant Tamil scholar.
அண்ணாதுறையை கருதப்படுகின்றது ஒரு புத்திமானாகவும் ஒரு பிரகாசமான தமிழ் கல்விமானாகவும்.
(அண்ணாத்துறை அவர்களை ஒரு பிரகாசமான தமிழ் கல்விமானாகவும் புத்திமானாகவும் கருத்தப்படுகின்றது.)
மேலுள்ள வாக்கியங்கள் செய்திகளில் காணப்பட்ட செயப்பாட்டுவினை வாக்கியங்களாகும்.
உங்கள் பயிற்சிக்கு Homework:
இங்கே உங்கள் பயிற்சிக்காக 10 சிறிய வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் மேலே பயிற்சி செய்த 47 செயப்பாட்டுவினை வாக்கியங்களைப் போன்று; ஒவ்வொரு வாக்கியங்களையும் 47 வாக்கியங்களாக அமைத்து எழுதிப்பாருங்கள். எழுதும் பொழுது வாசித்து வாசித்து எழுதுங்கள். அதுவே உங்கள் பேச்சாற்றலை எளிதாக வளர்த்துக்கொள்வதற்கான இரகசியமாகும். பின் எழுதியதை உங்கள் சக நண்பரிடமோ, உறவினரிடமோ பேசி பயிற்சி செய்யுங்கள்.
1. Ravi is investigated by police.
காவல் துறையினாரால் ரவியை விசாரிப்படுகிறது.
2. The Robot is made by Japan
இயந்திரனை ஜப்பானில் தயாரிக்கப்படுகிறது.
3. His interview is postponed
அவனுடைய நேர்முகத்தேர்வை தள்ளிப்போடப்படுகிறது.
4. She is appointed as Managing Director.
அவளை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறது
5. My wallet is stolen.
எனது பணப்பையை களவாடப்படுகிறது.
6. It is made
இதை தயாரிக்கப்படுகிறது.
7. Sitha is kidnapped by Iravanan.
சீதையை இராவணனால் கடத்தப்படுகிறது.
8. The letter is sent by post.
இந்த கடிதத்தை அனுப்பப்படுகின்றது தபாலில்.
9. The man is killed by Army.
அந்த மனிதனை கொல்லப்படுகின்றது இராணுவத்தால்.
10. It is done by Government of Sri Lanka
இதை செய்யப்படுகிறது இலங்கையின் அரசால்.
Direct Object - Indirect Object
செயப்பாட்டுவினை வாக்கியங்கள் ஆங்கிலத்தில் இரண்டு விதமாக பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று நேரடியாக செயப்படுபொருளை விவரிப்பவை. இதனை Direct Object என்பர். மற்றது மறைமுகமாக செயப்படுப்பொருளை விவரிப்பவை. இதனை Indirect Object என்பர்.
Direct Object:
அதாவது ஒரு செயலை யாரால் எதனால் செய்யப்படுகிறது என்பதை எவ்வித மறைவும் இன்றி நேரடியாக செயலை விவரிப்பவை.
Ravi was investigated by police.
காவல் துறையினாரால் ரவியை விசாரிக்கப்பட்டது.
The Robot was made by Japan
இயந்திரன்/னை ஜப்பானில் தயாரிக்கப்பட்டது.
Sitha was kidnapped by Iravanan.
சீதையை இராவணனால் கடத்தப்பட்டது.
The letter was sent by post.
கடிதம்/த்தை தபாலில் அனுப்பப்பட்டது.
The men was killed by Army.
அம்மனிதர்கள்/ளை இராணுவத்தால் கொல்லப்பட்டது. (கொல்லப்பாட்டார்கள்)
The window was broken by Sarmilan.
சாளரம்/த்தை சர்மிலனால் உடைக்கப்பட்டது.
Indirect Object: http://aangilam.blogspot.com
மறைமுகமாக செயப்படுப்பொருளை விவரிப்பவை அல்லது செயப்படுபொருளை மறைத்து, தவிர்த்து விவரிப்பவை (Indirect Object) ஆகும். அதாவது ஒரு செயலை யாரால் எதனால் செய்யப்படுகிறது என்பதை தவிர்த்து அல்லது வேண்டுமென்றே மறைத்து வினையை மட்டும் பேசுதலாகும். இவ்வாறு ஏன் பேசப்படுகின்றது என்பதற்கு மூன்று காரணங்களை குறிப்பிடலாம்.
1. ஒரு செயலை யாரால் செய்யப்பட்டது என்பது தெரியாதப்பொழுது செயலை மட்டும் விவரித்து பேசுதல்.
2. செயலுக்கான காரணி அல்லது காரணமானவர் யார் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் செயலை மட்டும் பேசுதல்.
3. யாரால் எதனால் செய்யப்பட்டது என்பதை வேண்டுமென்றே மறைத்து பேசுதல். (அநேகமான தலைப்புச்செய்திகள் இவ்வாறே காணப்படும்.)
Ravi was investigated.
ரவியை விசாரிப்பட்டது. (யாரால் விசாரிக்கப்பட்டது என்பதை கூறாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.)
The Robot was made.
இயந்திரன் தயாரிக்கப்பட்டது. (யாரால், எந்த நாட்டால், எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பவை கூறப்படவில்லை.)
Sitha was kidnapped.
சீதையை கடத்தப்பட்டது. (யாரால் கடத்தப்பட்டது என்பதை கூறப்படவில்லை)
The letter was sent.
கடிதத்தை அனுப்பப்பட்டது. (எப்படி எதனூடாக அனுப்பப்பட்டது என்பது விவரிக்கப்படவில்லை)
The men was killed.
அம்மனிதர்கள் கொல்லப்பட்டார்கள். (யாரால் கொல்லப்பட்டது என்பது மறைக்கப்பட்டுள்ளது.)
The window was broken.
சாரளம்/த்தை உடைக்கப்பட்டது. (யாரால் உடைக்கப்பட்டது என்பதை கூறப்படவில்லை அல்லது உடைத்தவர் யார் என்பது தெரியாது.)
குறிப்புகள்:
1. செயப்பாட்டுவினை (Passive Voice) இன் பயன்பாடுகளை எளிதாகக் கற்பதற்கு, முதலில் அங்கில் சாதாரண பேச்சு பயன்பாடுகளை அறிந்திருக்க வேண்டும். அதற்கு எமது Grammar Patterns 01 இல் இருந்து பயிற்சி செய்யுங்கள்.
2. செயப்பாட்டுவினை வாக்கியங்களின் பிரதான வினை (Main Verb) எப்பொழுதும் "Past Participle" சொற்களாகவே பயன்படும். அவற்றை Irregular verbs அட்டவணையில் பார்க்கலாம்.
3. செயப்பாட்டுவினை - செயல்வினை வேறுப்பாடுகள் அடுத்தப்பாடத்தில் வழங்கப்படும். (செயல்பாட்டுவினை பேச்சு வழக்கிக்கிற்கு பொருந்தாத அல்லது அதிகம் பயன்படுத்தப்படாத வாக்கிய அமைப்புகள் பற்றியும் பார்ப்போம்.)
சரி 2010 ஆம் ஆண்டின் இப்புதிய ஆங்கில பயிற்சிகளைத் தொடருங்கள். இதனை சரியாக பற்றிக்கொண்டீர்களானால், இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறை என்பதை நீங்களே உணர்வீர்கள்.
மேலும் பாடங்களை படிக்க இங்கே click செய்யுங்கள்.