செய்தி:இராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த இராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகில் இருந்த வலைகள், பலகைகளை இலங்கை கடற்படையினர் கடலில் மூழ்கடித்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது;இராமேஸ்வரத்தில் இருந்து சனிக்கிழமை சுமார் 600 விசைப் படகுகளில் கடலில் மீன்பிடிக்கச் சென்றோம். இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது 2 போர்க் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எங்கள் படகுகளை மடக்கிப் பிடித்தனர். ஜோசப், செல்வம், சேசு, சேகர் உள்ளிட்ட 10 பேருக்குச் சொந்தமான விசைப் படகுகளைப் பிடித்து அவற்றில் இருந்த மீன்பிடி வலைகள், பலகைகளை அரிவாளால் வெட்டிக் கடலில் மூழ்கடித்தனர். மீன் பதப்படுத்தும் ஐஸ் பெட்டிகளையும் கடலில் வீசினர். நாங்கள் பிடித்து வைத்திருந்த இறால் மீன்களையும் அள்ளிச் சென்றனர். நாங்கள் அனைவரும் வெறும் படகுகளுடன் சனிக்கிழமை இரவு கரைக்குத் திரும்பினோம். இதனால் 10 இலட்சம் ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது போன்ற தாக்குதல்களுக்கு இந்திய அரசாங்கம் என்னதான் செய்கிறது என்றே தெரியவில்லை. ஈழ தமிழர்களுக்காக ஒன்றும் செய்யாத இந்த அரசாங்கம் தன் சொந்த குடி மக்களையும் பாதுகாப்பதில்லை. தமிழர்களை இளிச்சவாயர்களாக நினைக்கும் போக்கு இப்போதும் தொடர்வது வேதனையளிப்பதாக உள்ளது. தமிழர் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் தலைவர்கள் இன்னும் தமிழ் நாட்டில் உள்ளார்களா? என்று தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக