1. தனக் கேதும் ஆபத்து நேராதென் றெண்ணும்
மனநிலை மாற்றல் அறிவு.
2. எச்செயல் செயினும் செய்யற்க அச்செயல்
ஆபத்துண் டாக்கு மெனின்
3. எண்ணும் எழுத்தும் கல்வியின் அரிச்சுவடி
உழைப்பும் பாதுகாப்பும் தொழிலின் அரிச்சுவடி
4. தன்னைத்தான் காக்கும் மனப்பான்மை இல்லாதான்
தன்னையே நாடும் விபத்து.
5. எதுகையும் மோனையும் கவிதைக்கு அழகு
எச்சரிக்கையும் பாதுகாப்பும் தொழிலுக்கழகு.
6. பாதுகாப்பே நோக்கமாய் பணிசெயின் ஆபத்தால்
யாண்டும் இடும்பை இல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக