சிறந்த வருமான வாய்ப்பு

இது தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்.

உங்கள் வீட்டுக்கு மாதம் ரூ.1000-க்கு குறையாமல் மளிகைப் பொருட்கள் வாங்குங்கள், ரூ.250 சேமியுங்கள். அத்துடன் சிறந்த வருமான வாய்ப்பையும் பெறுங்கள்.

அலைபேசி-9043584331

சனி, 17 ஜூலை, 2010

சமச்சீர் கல்வி

இந்திரன் : வாங்க சந்திரன், செம்மொழி மாநாட்டுக்கு போயிருந்தீங்க போலேயிருக்கு.

சந்திரன் : கோயமுத்தூரிலேயே இருந்துக்கிட்டு போகாம இருக்க முடியுமா?

இந்திரன் : மாநாடு நடந்த இடம், இனியவை நாற்பது பேரணி எல்லாம் பார்த்தீங்களா?

சந்திரன் : என்ன அருமையான அரங்க அமைப்பு, இனியவை நாற்பதை எவ்வளவு அருமையா அமைச்சிருந்தாங்க. வருகிற மக்களுக்காக செய்திருந்த ஏற்பாடுகள் எல்லாமே அருமையா இருந்தது போங்க.


இந்திரன் : உலகமுழுதும் இருந்து தமிழறிஞர்கள் வந்திருந்தாங்களே, பட்டிமன்றம், கவியரங்கம் எல்லாம் நல்லா இருந்திருக்குமே?

சந்திரன் : என்னையென்ன வேலையில்லாத வெட்டிபயல்னு நினைச்சீங்களா

இந்திரன் : ஏங்க கோபப்படுறீங்க, அப்போ மாநாட்டுக்கு சுத்திப் பார்க்கத்தான் போனிங்களா?

சந்திரன் : நான் மட்டுமில்லீங்க, வந்திருந்த 90 சதவீத மக்கள் அதுக்குத்தான் வந்தாங்க. மாநாடு முடிஞ்சும் ஒரு வாரத்துக்கு கூட்டம் வந்த்ததை பத்திரிக்கையிலே பார்த்திருப்பீங்களே. அவங்கள்ளாம் பட்டிமன்றத்தையும், கவியரங்கத்தையுமா பார்க்க வந்தாங்க


இந்திரன் : அப்போ இனிமே தமிழ் புது வேகத்தோட வளரும்னு சொன்னாங்களே, அதெல்லாம் சும்மாதானா?

சந்திரன் : இந்த மாநாட்டுனால தமிழ் வளருதோ இல்லியோ, கட்சிக்காரங்க நிறைய பேர் வளர்ந்திருப்பாங்க.

இந்திரன் : இந்த மாதிரி நேரங்கள்ள நடக்கிறதுதான். தமிழை வளர்க்கிறதுக்கு அடிப்படையான ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்குது. அதைப் பயன்படுத்தாமே வீணடிச்சுட்டாங்களே.

சந்திரன் : எதைச் சொல்றீங்க?

இந்திரன் : நான் மாநாட்டை சொல்லலீங்க. சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வந்தாங்களே, அதைத்தான் சொல்றேன். நகர்புற மாணவனுக்கும் கிராமப்புற மாணவனுக்கும் ஒரே மாதிரி கல்வி கிடைக்கனும்னு கொண்டு வந்ததுதான் சமச்சீர் கல்வி. இந்த வருடதிலேயிருந்து முதல் வகுப்பிலேயும், ஆறாம் வகுப்பிலேயும் அறிமுகப்படுத்தியிருக்காங்க.

சந்திரன் : நல்ல விசயம் தானே

இந்திரன் : நல்ல விசயம் தான். ஆனா நான் என்ன சொல்ல வற்றேன்னு கீழேயிருக்கிற ஒன்னாம் வகுப்பு புத்தகங்களின் படங்களை பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும்.



சந்திரன் : என்னங்க இது, தமிழ் பாடம் ஒன்னுதான் இருக்கு. மத்ததெல்லாம் english-லே இருக்கு

இந்திரன் : சமுதாயத்திலே புதுசா ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்தனும்னா அதை குழந்தைகள் கிட்டே இருந்து ஆரம்பிங்கன்னு அப்துல் கலாம் சொன்னாரு, ஆரம்ப கல்வியை தாய் மொழியிலே படிக்கிறது குழந்தைங்க திறனை வளர்க்கும்னு அறிவியல் அறிஞர்கள் சொல்றாங்க. ஆனா நம்ம அரசாங்கம் என்ன செய்யுது. அஸ்திவாரத்தை பத்தி கவலை படாம மேல் மாடியில உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அப்படிங்கிற பேருல கோடிக் கணக்குல செலவு செஞ்சு அலங்காரம் பன்னிட்டிருக்குது. ஒரு படத்துல வடிவேல் சொல்வாரு Building strong ஆ இருக்கு basement தான் week னு. அப்படித்தான் இருக்குது நம்ம தாய்மொழியோட நிலமையும்.

சந்திரன் : நல்லா சொன்னீங்க போங்க

மறக்காம வோட்டுப் போடுங்க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக