சிறந்த வருமான வாய்ப்பு

இது தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்.

உங்கள் வீட்டுக்கு மாதம் ரூ.1000-க்கு குறையாமல் மளிகைப் பொருட்கள் வாங்குங்கள், ரூ.250 சேமியுங்கள். அத்துடன் சிறந்த வருமான வாய்ப்பையும் பெறுங்கள்.

அலைபேசி-9043584331

திங்கள், 8 மார்ச், 2010

அரட்டை அரங்கம் - Arattai Arngam

அரட்டை அரங்கமா? வெறும் வாய் பேச்சா?

கடந்த ஞாயிறு(7-3-2010) அன்று சன் டீவியின் அரட்டை அரங்கம் பார்த்துக் கொண்டிருந்தேன். காதல் திருமணம் சிறந்தா? பெரியவர்கள் பார்த்தி வைக்கும் திருமணம் சிறந்ததா? என்று பேசினார்கள்.

அதில் ஒரு இளைஞர் முதலில் பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணத்தை ஒரு பிடி பிடித்தார். பின்னர் காதல் திருமணமி செய்பவர்களையும் ஒரு பிடி பிடித்தார். அதன் பிறகு தன்னுடைய வாழ்க்கை லட்சியத்தை சொன்னார்.

அவரின் வாழ்க்கை லட்சியம் இதோ - அழகான பெண்களுடன் சுற்றுவது, கடலை போடுவது, இரவானால் சரக்கு அடிப்பது. தமிழ் இளைஞர்களின் வாழ்க்கை லட்சியம் எவ்வளவு உயர்ந்ததாக உள்ளது. இதில் எதிரணியில் பேசிய பெண் போன மாதம் அவளுடன் சுற்றி கொண்டிருந்தாயே என்றதற்கு அது போன மாதம். இது இந்த மாதம் என்கிறார்.

எனக்கு இதில் சில விசயங்கள் புரியவில்லை.

1.இவர்கள் உண்மையைத் தான் பேசுகிறார்களா?

2.இல்லையென்றால் ஒரு மைக்கும் மேடையும் கிடைத்து விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்கும் தமிழக அரசியல் வாதிகளை போன்ற எண்ணமா?

3. இவர்கள் இப்படி பேசுவது உண்மையானால் அதன் பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள், சுற்றத்தார், பெண் நண்பர்கள் இவர்களை மதிப்பார்களா?

மறக்காம வோட்டுப் போடுங்க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக