சிறந்த வருமான வாய்ப்பு

இது தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்.

உங்கள் வீட்டுக்கு மாதம் ரூ.1000-க்கு குறையாமல் மளிகைப் பொருட்கள் வாங்குங்கள், ரூ.250 சேமியுங்கள். அத்துடன் சிறந்த வருமான வாய்ப்பையும் பெறுங்கள்.

அலைபேசி-9043584331

புதன், 10 மார்ச், 2010

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா - Women's reservation bill

திங்கள், 7 மார்ச் 2010

மக‌ளி‌ர் இடஒது‌க்‌கீடு மசோதா மா‌நில‌ங்களவை‌யி‌ல் நாளை தா‌க்க‌ல்


பெ‌ண்களு‌க்கு 33 சத‌வீத இடஒது‌க்‌கீடு வழ‌ங்கு‌ம் மசோதா மாநிலங்களவையில் நாளை ‌தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்படு‌கிறது.

மாநிலங்களவையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை கிடையாது. எனவே இந்த மசோதா நிறைவேற பா.ஜ.க ஒத்துழைப்பு அளிப்பதென முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக நே‌ற்று நட‌ந்த பா.ஜ.க தலைவர் கூட்டிய கூட்டத்தில், மகளிர் மசோதாவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதென்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது என்று தே‌சிய‌த் தலைவ‌ர் கட்கரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது தொடர்பாக மாநிலங்களவை பா.ஜ.க கொறடா, தனது கட்சியினருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். மகளிர் மசோதா அறிமுகம் ஆகும்போது அனைத்து பா.ஜ.க உறுப்பினரும் அவையில் இருந்து அது நிறைவேற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தற்போதைய வடிவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும்போது அதை கடுமையாக எதிர்ப்போம் என சமா‌ஜ்வாதி கட்சி‌த் தலைவ‌ர் முலாய‌ம்‌ சி‌ங் யாத‌வ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மகளிருக்கு உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ராஷ்ட்ரீய ஜனதா தளம், பாமக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இத‌னிடையே ம‌க‌ளி‌ர் மசோதாவை ஆதரிப்பதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவுக்கும், அக்கட்சியைச் சேர்ந்தவரும், ‌பீகார் முதலமை‌ச்சருமான நிதிஷ்குமாருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

திங்கள், 8 மார்ச் 2010( 11:20 IST )

மாநிலங்களவை 12 மணி வரை தள்ளிவைப்பு


மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்ற பரபரப்புடன் துவங்கிய மாநிலங்களவை, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் நண்பகல் 12 மணி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை இன்று துவங்கியதும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அளித்த அறிக்கையை மத்திய அரசு ஏன் அமல்படுத்தவில்லை என்று சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி கோஷமிட்டனர்.

இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகளை மதியம் 12 மணி வரை தள்ளி வைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

திங்கள், 8 மார்ச் 2010( 12:33 IST )

மகளிர் மசோதாவில் மாற்றம் கோரி அமளி: மக்களவை தள்ளிவைப்பு


மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் உள்ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில், பிற்படுத்தப்பட்ட, தலித் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்

இதன் காரணமாக மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகளை மதியம் 2 மணி வரை தள்ளிவைப்பதாக அவைத்தலைவர் மீரா குமார் அறிவித்தார்.

திங்கள், 8 மார்ச் 2010( 14:04 IST )

மத்திய அரசுக்கான ஆதரவு: சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் வாபஸ்


மகளிருக்கான இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை ஏற்காத காரணத்தால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத், “மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உள்ஒதுக்கீடு இன்றி நிறைவேற்றுவது அரசியல் ஏமாற்றுத்தனம். இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். எனவே, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திருமப் பெறுகிறோம்” என்றார். அப்போது முலாயம் சிங் உடனிருந்தார்.

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவில், பிற்படுத்தப்பட்டோர், தலித் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் கோரியிருந்தன. ஆனால் அதனை ஏற்காத மத்திய அரசு மகளிர் மசோதாவை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்ய உள்ளது.

மக்களவையில் சமாஜ்வாடிக்கு 21 உறுப்பினர்களும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு 4 உறுப்பினர்களும் உள்ளனர். அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவை இரு கட்சிகளும் விலக்கிக் கொண்ட போதிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு உள்ள பெரும்பான்மை பலம் பாதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 8 மார்ச் 2010( 15:27( 11:20 IST )

மகளிர் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: நாடாளுமன்றம் தள்ளிவைப்பு


மக்களவை, சட்டப்பேரவையில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களவை, மாநிலங்களையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டதால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இரு அவைகளும் மாலை 4 மணி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முக்கிய எதிர்க்கட்சியான பாஜக ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ள போதிலும், அந்த மசோதாவில் பிற்படுத்தப்பட்ட, தலித் இனப் பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து அவை நடவடிக்கைகள் மாலை 4 மணி வரை தள்ளி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

திங்கள், 8 மார்ச் 2010( 15:45 IST )

மாநிலங்களவையில் அமளி: அன்சாரியிடம் அமைச்சர்கள், தலைவர்கள் மன்னிப்பு


மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின் போது மரியாதைக் குறைவான முறையில் நடந்து கொண்டதற்காக அவைத் தலைவர் ஹமீத் அன்சாரியிடம் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மன்னிப்புக் கோரினர்.

மகளிர் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகளை அன்சாரி தள்ளி வைத்தார்.

இதையடுத்து, அவையில் மரியாதைக் குறைவாக நடந்து கொண்ட காரணத்திற்காக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, ப்ரித்விராஜ் சௌஹான், எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி ஆகியோர் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியிடம் மன்னிப்புக் கோரினர்.

இதேபோல் மாயா சிங் (பாஜக), சீத்தாராம் யெச்சூரி, பிருந்தா காரத், டி.ராஜா, கரண் சிங், ராஜிவ் சுக்லா (காங்.), மைசுரா ரெட்டி (தெலுங்கு தேசம்), பரத் குமார் ரௌத் (சிவசேனா), டி.சிவா (திமுக) ஆகியோரும் அன்சாரியை சந்தித்து மன்னிப்புக் கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள், 8 மார்ச் 2010( 16:22 IST )

மக்களவை நாளை வரை தள்ளிவைப்பு: மாநிலங்களவையில் 6 மணிக்கு வாக்கெடுப்பு


நாடாளுமன்றம், சட்டப் பேரவையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவின் மீதான வாக்கெடுப்பு மாநிலங்களவையில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.

முன்னதாக, இன்று மதியம் 2 மணிக்கு மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதில் பிற்படுத்தப்பட்ட, தலித் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர். இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டது.

மாலை 4 மணிக்கு மாநிலங்களவை மீண்டும் கூடிய போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் மாலை 4 மணிக்கு அவை மீண்டும் கூடிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் நாளை காலை வரை அவை நடவடிக்கைகளை தள்ளி வைப்பதாக அவைத் தலைவர் மீரா குமார் அறிவித்தார்.

திங்கள், 8 மார்ச் 2010( 20:35 IST )

மகளிர் மசோதா மீது விவாதம் நடத்தாமல் வாக்களிக்க மாட்டோம்: பாஜக


மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம் நடத்தப்படாவிட்டால் வாக்களிக்க மாட்டோம் என பாஜக தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மாநிலங்களையில் இன்று மதியம் 2 மணிக்கு மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவில் பிற்படுத்தப்பட்ட, தலித் இன மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும் என பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மாநிலங்களவை நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு அவை மீண்டும் கூடிய போதும் கூச்சல், குழப்பம் நீடித்ததால் அவை நடவடிக்கைகள் மாலை 6 மணி வரை தள்ளிவைப்பதாகவும், மாலை 6 மணிக்கு மேல் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறிய பாஜக, மசோதா மீது விவாதம் நடத்தாமல் அதன் மீது வாக்கெடுப்பு நடத்தினால் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலங்களவைத் துணைத்தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா, “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த (மகளிர்) மசோதாவை தாக்கல் செய்வதில் மத்திய அரசு உரிய வரையறையை கடைப்பிடிக்க வேண்டும். இந்த மசோதா மீது விவாதம் நடத்தாமல் நாங்கள் வாக்களிக்க மாட்டோம். அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மசோதா மீது நிச்சயம் விவாதம் நடத்தப்பட வேண்டும்” என்றார்.

திங்கள், 8 மார்ச் 2010( 18:40 IST )

மாநிலங்களவையில் அமளி: மகளிர் மசோதா மீதான வாக்கெடுப்பு தள்ளிவைப்பு


நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மீது மாநிலங்களவையில் இன்று நடைபெறுவதாக இருந்த வாக்கெடுப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 2 மணிக்கு மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை மாநிலங்களையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. முன்னதாக அவை நடவடிக்கையின் போது அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி மேஜை மீது வைக்கப்பட்டிருந்த மசோதா நகலை கிழித்து எறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முயன்றதால் அமளி ஏற்பட்டது.

மாநிலங்களை ஒவ்வொரு முறை கூடிய போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாலை 6 மணிக்கு மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் மகளிர் மசோதா மீது விவாதம் நடத்தாமல் வாக்களிப்பு நடத்தினால் அதில் பங்கேற்க மாட்டோம் என பாஜக அறிவித்தது. இந்நிலையில் மாலை 6 மணிக்கு மக்களவை கூடிய, ஒரு சில நிமிடங்களில் மகளிர் மசோதா மீதான வாக்கெடுப்பை தள்ளிவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார்.

திங்கள், 8 மார்ச் 2010( 19:17 IST )

மகளிர் மசோதா: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மன்மோகன் ஏற்பாடு


மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சுமூகமாக நிறைவேற்றுவது குறித்து விவாதிக்க நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கூட்டியுள்ளார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகளின் கடும் அமளி காரணமாக வாக்கெடுப்பு நடத்த முடியாமல் அவை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் பா.ஜனதா, சிபிஐ - எம், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி மற்றும் ஆர்ஜேடி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களை பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.

அப்போது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற அவர்களது ஒத்துழைப்பை கோரினார்.

மேலு இம்மசோதாவை சுமூகமாக நிறைவேற்றுவது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்காக நாளை அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தாம் கூட்டி உள்ளதாகவும், இதில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களை மன்மோகன் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற வேண்டும் என தமது கட்சி விரும்பும் அதே சமயத்தில் நாடாளுமன்ற மரபுகளும் மதிக்கப்பட வேண்டும் என கருதுவதாகவும் கூறினார்.

செவ்வாய், 9 மார்ச் 2010( 09:57 IST )

காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மேலிடம் உத்தரவு


இன்றைய மாநிலங்களவை நடவடிக்கையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று தவறாமல் பங்கேற்க வேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மீதான வாக்கெடுப்பு கடும் அமளியின் காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து இன்று வாக்கெடுப்பு நடக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று தவறாமல் மாநிலங்களவை நடவடிக்கையில் பங்கேற்க வேண்டும் என நேற்று மாலை கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய், 9 மார்ச் 2010( 10:42 IST )

சரத் யாதவ், லாலு, முலாயம் பிரதமருடன் சந்திப்பு


நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை எதிர்க்கும் அரசியல் தலைவர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்துள்ளனர்.

ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று புதுடெல்லியில் சந்தித்துப் பேசினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அனைவரும் கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது பேசிய சரத் யாதவ், “மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினேன்” என்றார்.

லாலு பிரசாத் கூறுகையில், “அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா பற்றி விவாதிக்க வேண்டும்” என்றார்.

செவ்வாய், 9 மார்ச் 2010( 11:31 IST )

மகளிர் மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்பு: மாநிலங்களவை தள்ளிவைப்பு


நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை இன்று காலை துவங்கியதும் ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மகளிர் மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி, “உறுப்பினர்களின் நடவடிக்கை கவலையளிக்கிறது” என்று கூறி அவை நடவடிக்கைகளை மதியம் 12 மணிவரை தள்ளிவைப்பதாக அறிவித்தார்.

செவ்வாய், 9 மார்ச் 2010( 11:51 IST )

மகளிர் மசோதாவுக்கு எதிர்ப்பு: முலாயம், லாலுக்கு அமர் சிங் எச்சரிக்கை


பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் யாதவத் தலைவர்கள், நாட்டில் உள்ள பெண்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என அமர் சிங் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது வலைப்பூவில் அமர் சிங் வெளியிட்டுள்ள கருத்தில், “யாதவ தலைவர்களே, பெண்கள் சக்தியை வீணாக கோபப்படுத்தாதீர்கள். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட வேண்டியது அரசியல் ரீதியாக தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது” எனக் கூறியுள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றும் விவகாரத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சிகள் விலக்கிக் கொண்டதற்கும் அமர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடிக் கட்சியில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்த அமர் சிங், கருத்து வேறுபாடு காரணமாக கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கடந்த சில மாதங்களுக்கு முன் நீக்கப்பட்டார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

செவ்வாய், 9 மார்ச் 2010( 12:47 IST )

மகளிர் மசோதாவைக் கிழித்த 7 எம்.பி.க்கள் நீக்கம்: ஹமீத் அன்சாரி அதிரடி


மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைக் கிழித்தெறிந்த 7 மாநிலங்களவை உறுப்பினர்களை தற்காலிமாக நீக்குவதாக அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கிடைக்க வகை செய்யும் மகளிர் மசோதாவை மத்திய அரசு நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தது.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மசோதாவைக் கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மசோதா மீதான வாக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையில், நேற்று மசோதாவை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த இஜாஸ் அலி, சுபாஷ் யாதவ், சபிர் அலி, நந்த் கிஷோர் யாதவ், கமல் அக்பர், அமிர் ஆலம் கான், வீர்பால் சிங் யாதவ் ஆகியோரை தற்காலிகமாக நீக்குவதாக அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி இன்று அறிவித்தார்.

நேற்றைய மாநிலங்களவை நடவடிக்கையின் போது ஹமீத் அன்சாரி மேஜையில் இருந்து ஒலிப்பெருக்கியைப் பிடுங்கி அவைத் தலைவரைத் தாக்க கிஷோர் யாதவ் முயன்றது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 9 மார்ச் 2010( 12:37 IST )

மகளிர் மசோதாவுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றம் 2 மணி வரை தள்ளிவைப்பு


மகளிர் மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்புத் தெரிவித்து இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல் மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைத்தலைவர் மீரா குமாரின் இருக்கையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 9 மார்ச் 2010( 14:15 IST )

மகளிர் ஒதுக்கீட்டை எதிர்த்து அமளி: மக்களவை 3 முறையாக தள்ளிவைப்பு


நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கும் சட்ட வரைவை எதிர்த்து சமாஜ்வாடி, இராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 3 முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மக்களவை கூடியதும் சட்ட வரைவை எதிர்க்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் அவையின் நடுப்பகுதிக்கு வந்து எதிர்ப்பு முழக்கமிட்டனர். இதனால் அவை நடவடிக்கைகளை சிறுது நேரத்திற்கு மக்களவைத் தலைவர் மீரா குமார் தள்ளிவைத்தார்.

அவை மீண்டும் கூடியபோதும் இதே நிலை தொடர்ந்தது. எதிர்ப்பு முழக்கங்களுக்கு இடையிலும் கேள்வி நேரம் நடத்தினார். ஆனால் சமாஜ்வாடி, இராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் உரத்த குரலில் முழங்கியதால் அவை நடவடிக்கைகளை மீண்டு்ம் தள்ளிவைக்கப்பட்டது.

அதன் பிறகு, 12 மணிக்கு மீண்டும் அவை கூடியதும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், இராஷ்ட்ரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் ஆகியோரும் தங்கள் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து அவையின் மையப் பகுதிக்கு வந்து எதிர்ப்பு முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகளை 3வது முறையாக பிற்பகல் 2 மணி வரை மீரா குமார் தள்ளி வைத்தார்.

செவ்வாய், 9 மார்ச் 2010( 14:42 IST )

இரு அவைகளும் 4வது முறையாக தள்ளிவைப்பு


மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை, மக்களவை நடவடிக்கைகள் இன்று 4வது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 2 மணிக்கு மக்களவை மீண்டும் கூடிய போது நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கும் சட்ட வரைவை எதிர்த்து சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நடவடிக்கைகளை 4 மணி வரை தள்ளி வைப்பதாக அவைத்தலைவர் மீரா குமார் அறிவித்தார்.

இதேபோல் மதியம் 2 மணிக்கு மாநிலங்களவை மீண்டும் கூடிய போதும் மகளிர் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகளை மாலை 3 மணி வரை தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

செவ்வாய், 9 மார்ச் 2010( 17:58 IST )

மகளிர் மசோதா: மம்தா கட்சி வாக்களிக்காது


மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வாக்களிக்காது என்று தெரிகிறது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இம்மசோதா மீதான பிரச்னை குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்த நிலையில், திடீரென மகளிர் மசோதா வாக்கெடுப்புக்கும், விவாதத்திற்கும் எடுத்துக்கொளப்பட்டதால், தமது கட்சி உறுப்பினர்களை அவையில் கலந்துகொள்ளும்படி தம்மால் தகவல் தெரிவிக்க முடியாமல் போய்விட்டதாகவும், எனவே வாக்கெடுப்பில் தமது கட்சி கலந்துகொள்ளாது என்றும் மம்தா தெரிவித்துள்ளார்.

மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவையில் 2 உறுப்பினர்கள் உள்ள நிலையில், அவரது இந்த முடிவு ஐமுகூ அரசுக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

செவ்வாய், 9 மார்ச் 2010( 19:47 IST )

மகளிர் இடஒதுக்கீடு சட்ட வரைவு மாநிலங்களவையில் நிறைவேறியது!


நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட வரைவு மாநிலங்களவையில் நிறைவேறியது.

மகளிர் இடஒதுக்கீடு மீது நடந்த விவாதத்திற்குப் பிறகு மாநிலங்களவைத் தலைவர் அமீத் அன்சாரி வாக்கெடுப்பு நடத்தினர்.

இதில், மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரித்து 186 வாக்குகள் பதிவாகின. எதிர்த்து ஒரு வாக்கு பதிவானது.

மூன்றில் இரண்டு விழுக்காடு வாக்குகள் ஆதரவாக பதிவானதையடுத்து மகளிர் இடஒதுக்கீடு சட்ட வரைவு நிறைவேறியதாக மாநிலங்களவைத் தலைவர் அமீத் அன்சாரி அறிவித்தார்.

செவ்வாய், 9 மார்ச் 2010( 14:54 IST )

மன்மோகன், சோனியாவுடன் முலாயம், லாலு சந்திப்பு


மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் லாலு பிரசாத், முலாயம் சிங், சரத் யாதவ் ஆகியோர் பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியாவைச் சந்தித்து தங்களின் எதிர்ப்புக்கான விளக்கத்தை அளித்தனர்.

நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கும் சட்ட வரைவில், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்த மகளிர் மசோதா மீது விவாதம் நடத்தப்படவில்லை. மாலை 6 மணிக்கு நடைபெறுவதாக இருந்த மசோதா மீதான வாக்கெடுப்பும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் அவர்கள் மூவரும் காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்தித்து பேசினர்.

மாநிலங்களவையில் மகளிர் மசோதாவை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன், பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று மதியம் சந்திப்பு நடத்தினார்.

பிரதமர் உடனான சந்திப்பின் போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அகமது படேல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா ஆகியோரும் உடனிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன், 10 மார்ச் 2010( 08:27 IST )

மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் கடிதத்தை குடியரசு தலைவ‌ரிடம் கொடுக்கிறார் லாலு


மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் கடிதத்தை குடியரசு தலைவ‌‌ர் ‌பிர‌தீபா பா‌‌ட்டீ‌லிட‌ம் இ‌ன்று ரா‌ஷ்டி‌‌ரீய ஜனதாதள‌ம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் லாலு ‌பிரசா‌த் யாத‌வ் கொடு‌க்‌கிறா‌ர்.

நானும், முலாயம் சிங்கும் பிரதமரை சந்தித்த போது, தற்போது உள்ள நிலையிலேயே பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம் எ‌ன்று‌ம் எங்களுடைய வேண்டுகோளையும் மீறி மசோதாவை மா‌நில‌ங்களவை‌யி‌ல் அரசு நிறைவேற்றி இருக்கிறது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

எனவே குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீலை இ‌ன்று சந்தித்து, மத்திய அரசுக்கு ராஷ்டிரீய ஜனதாதளம் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் கடிதத்தை கொடுக்க இருக்கிறேன் எ‌ன்று லாலு பிரசாத் கூறினார்.

நன்றி வெப்துனியா.காம்

இத்துடன் எனது முந்தைய இடுகையையும் படித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
இடுகையை படிக்க இங்கே சொடுக்கவும்.

மறக்காம வோட்டுப் போடுங்க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக