சிறந்த வருமான வாய்ப்பு

இது தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்.

உங்கள் வீட்டுக்கு மாதம் ரூ.1000-க்கு குறையாமல் மளிகைப் பொருட்கள் வாங்குங்கள், ரூ.250 சேமியுங்கள். அத்துடன் சிறந்த வருமான வாய்ப்பையும் பெறுங்கள்.

அலைபேசி-9043584331

செவ்வாய், 9 மார்ச், 2010

Nithiyanatha with ranjitha

உண்மையயை உணருங்கள் தமிழ் மக்களே


Daily thanthi

சுவாமி நித்யானந்தா மீது வழக்கு பதிவு
`உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீஸ் கமிஷனர் தகவல்


சென்னை, மார்ச்.5-

சுவாமி நித்யானந்தா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.

நித்யானந்தா மீது புகார்கள்

சுவாமி நித்யானந்தா மீது நேற்றும் சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வக்கீல்கள் புகார் மனுக்கள் கொடுத்தனர். வக்கீல் சிவா கொடுத்த புகார் மனுவில், சுவாமி நித்யானந்தா இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டுள்ளார். காவி உடையோடு `செக்ஸ்' லீலையில் ஈடுபட்டுள்ளார். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.

தமிழக இந்து மக்கள் கட்சி சார்பில் குமாரவேல் என்பவரும் ஒரு மனு கொடுத்தார். அவர் கொடுத்த மனுவில், நித்யானந்தா சம்பந்தப்பட்ட ஆபாச காட்சிகளை ஒளிபரப்பு செய்யாமல் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். வக்கீல் கார்த்திகேயன் என்பவர் கொடுத்த மனுவில், நித்யானந்தா மீதும், அவரோடு இருக்கும் நடிகை மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இது சம்பந்தமான ஆபாச காட்சிகளை வெளியிடுவதற்கும் தடை விதிக்க கோரிக்கை வைத்திருந்தார்.

கிரிமினல் வழக்கு

இந்த புகார்கள் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், நித்யானந்தா மீது வக்கீல்கள் கொடுத்த புகார் மனு அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவர்மீது புகார் மனுக்கள் வந்தால் அவற்றின்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதேபோல், நித்யானந்தாவுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது இ.பி.கோ. 420 மற்றும் 295-ஏ ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கோவை போலீசார் தெரிவித்தனர்.

மகனை மீட்டுத்தர கோரிக்கை

இதற்கிடையே, சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் மணலி பகுதியை சேர்ந்த வாசன் என்பவர் ஒரு புகார் மனு தந்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

எனது மகன் மெய்யிறை (வயது 26) என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நித்யானந்தா சாமியார் மடத்தின் சார்பில் யோகா நடந்தது. இதில் எனது மகன் கலந்து கொண்டார்.

பின்னர் வாழ்க்கை கல்வி என்ற ஓராண்டு வகுப்பில் சேர்ந்தார். இதற்காக கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூர் சென்றார். 3 ஆண்டுகளாகியும் மெய்யிறை வரவில்லை. நான் பெங்களூர் சென்றபோது எனது மகனை பார்க்க விடவில்லை. அங்கு சிறை வைக்கப்பட்டு உள்ள எனது மகனை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த புறநகர் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், `காவல் துறை ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தி சாமியார்களை கண்காணிக்கவேண்டும். குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். இவற்றை எல்லாம் வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 11-ந் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபையில்...

கர்நாடக சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி (காங்) தலைவர் சித்தராமையா பேசும் போது, "பிடதி அருகே ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்த சாமியை உடனே கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும். அவர் செய்து இருப்பது ஜாமீனில் வெளிவராத குற்றமாகும். ஆசிரம சொத்துக்களை அரசு முடக்க வேண்டும்'' என்று கூறினார்.

இதற்கு போலீஸ் மந்திரி ஆச்சார்யா பதில் அளித்து கூறியதாவது:-

நித்யானந்த சாமி தமிழ்நாடு திருவண்ணாமலையை சேர்ந்தவர். பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகி உள்ள ஆபாச காட்சிகள் கர்நாடகத்தில் நடந்தது அல்ல. ஆசிரமத்தில் புலி, மான் போன்ற மிருகங்களின் தோல்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். ஆனால் அதுபோன்ற மிருக தோல்கள் எதுவும் அங்கு கிடைக்கவில்லை. 26 கிலோ சந்தன மர துண்டுகள் மட்டும் கிடைத்தது. ஏற்கனவே ஆசிரமத்தில் உள்ள சந்தன மரம் திருட்டுப்போய் இருப்பதாக போலீசில் புகார் கூறப்பட்டு உள்ளது.

இந்த துண்டுகள் அந்த மரத்தின் கிளைகளாகவும் இருக்கலாம். நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு போலீசுடன் நிரந்தர தொடர்புடன் உள்ளோம். அவர் இங்குள்ள ஆசிரமத்துக்கு வந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு போலீஸ் மந்திரி ஆச்சார்யா கூறினார்.


daily thanthi

நித்யானந்தா மீது வழக்குப்பதிவு:
நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு


கோவை, மார்ச்.6-

நித்யானந்தா மீது கோவையில் பதிவான வழக்கு தொடர்பாக நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

2 பிரிவுகளில் வழக்கு

கோவை கணபதி பூசாரிபாளையம் மணியகாரன்பாளையத்தை சேர்ந்தவர் டி.எம்.விஸ்வநாத். இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் `ஆன்மிகத்தின் பெயரால் நித்யானந்தா பொது மக்களை நம்ப வைத்து அவர்களிடமிருந்து காணிக்கை, நன்கொடை மற்றும் கட்டணம் ஆகிய வழிகளில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு பணம் வசூலித்து அதனை தன் சுயலாபத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார். கோவை மாநகரில் `பகவத் கீதை சத் சங்கம்' என்ற பெயரில் பெரிய அளவிலான பொருட்செலவில் முகாமை நடத்தி பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே நித்யானந்தாவை கைது செய்து விசாரிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.

அவருடைய மனுவின் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 420 (மோசடி), 295 ஏ (மத நம்பிக்கையை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த முடிவு

இதுகுறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், நித்யானந்தா மீதான வழக்கு தொடர்பாக நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா ஆபாச காட்சிகள் கொண்ட வீடியோவை ஆதாரமாக சேர்க்கவும், நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். ரஞ்சிதா இருக்கும் இடம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

நித்யானந்தா மீது தமிழகம், கர்நாடகா உள்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் புகார் கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் பதிவாகும் புகார்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் விசாரிக்கும் வாய்ப்பும் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.


கமிஷனர் அலுவலகத்தில்...

இதற்கிடையே சென்னையில் நேற்று மாலை நித்யானந்தா சுவாமிகளின் ஆசிரம வக்கீல் ஸ்ரீதர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நித்யானந்தா சுவாமிகள் தலைமறைவாகவில்லை. அவர் 18-ந் தேதிக்கு பிறகு சென்னை வருவார்'' என்று தெரிவித்தார்.

ரஞ்சிதா மீது...

சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை வக்கீல் ராஜலட்சுமி என்பவர் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

நித்யானந்தா, நடிகை ஒருவருடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகளை வெளியிட்டது, பிளஸ்-2 பரீட்சை எழுதும் மாணவ-மாணவிகளை பெரிதும் பாதித்து விட்டது. எதிர்காலத்தில் இது போன்ற ஆபாச காட்சிகளை வெளியிடாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதே போல் தமிழ்நாடு நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் அதன் மாநில செயலாளர் சபீர் என்பவர் கொடுத்த புகாரில், நடிகை ரஞ்சிதா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

daly thanthi

குற்றச்சாட்டுகள் பற்றி நித்யானந்தா சாமியார் வீடியோவில் தோன்றி பரபரப்பு பேச்சு
"சட்ட ரீதியாக எந்த தவறையும் செய்யவில்லை''

சென்னை, மார்ச்.8-

நித்யானந்தா சாமியார் நேற்று திடீர் என்று வீடியோ காட்சியில் தோன்றி `நான் சட்ட ரீதியாக எந்த தவறையும் செய்யவில்லை, உண்மை வெளிவரும் வரை பொறுமையாக இருங்கள்' என்று சீடர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஆபாச காட்சியில் நித்யானந்தா சாமியார்

தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு இடங்களில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவர் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் டி.வி. மற்றும் பத்திரிகைகளில் வெளியானது. இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நித்யானந்தா சாமியார் வீடியோவில் பேசிய ஆடியோ விடியோ அடங்கிய சி.டி.யை அவரது வக்கீல் ஸ்ரீதர் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்தார். அந்த வீடியோ காட்சியில் நித்யானந்தா சாமியார் பேசியதாவது:-

உங்கள் அனைவரையும் வணங்குகிறேன். கடந்த சில நாட்களாக என் மீதும், தியான பீடத்தின் சங்கத்தின் மீதும், பல குற்றங்களும், வதந்திகளும் பரப்பப்பட்டு வருகிறது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்.

அதே நேரத்தில் உலகம் முழுவதும் இருந்தும் என் பக்தர்கள், அன்பர்கள், நண்பர்கள் அனைவருடைய அன்பையும், ஆதரவையும் இ-மெயில் மூலமாகவும், கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் பெற்றுக்கொண்டிருக்கின்றேன்.

எந்த தவறையும் நான் செய்யவில்லை

எனது செய்கையாலும், தியானங்களாலும் பயன் அடைந்த அன்பர்களுக்கும், பக்தர்களுக்கும் என்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளும், வதந்திகளும் கவலையளிப்பதாக உள்ளது.

எல்லோருக்கும் ஆணித்தரமாக சொல்லவிரும்புகிறேன். சட்ட ரீதியாக எந்த தவறையும் நானோ, தியான பீடமோ செய்யவில்லை, நாங்கள் இந்த குற்றச்சாட்டுகளையும், வதந்திகள் சார்ந்த எல்லாவிதமான செய்திகளையும், உண்மைகளையும் திரட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கும், வதந்திகளுக்கும் பின்னால் இருக்கும் காரணம், அவர்களின் மனஅமைப்பு. இவைகளில் இருக்கும் பொய்கள் அனைத்தையும் கண்டறிய எல்லா உண்மைகளையும் திரட்டிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த எல்லா குற்றச்சாட்டுகள் பற்றியும் மிகத்தெளிவான விளக்கத்தை விரைவில் அளிக்கின்றேன். தயவு செய்து அந்த செய்திகளை சேகரிக்கின்ற சில நாட்கள் வரை மட்டும் பொறுமையோடு இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எல்லாவிவரங்களையும் தெரிந்து கொள்ளாமல் எந்த முடிவுக்கும் நீங்கள் வரவேண்டாம் என்று எல்லோரையும் மனம் உருகி கேட்டுக்கொள்கிறேன்.

உண்மையை நேரில் சொல்கிறேன்

எல்லா உண்மைகளும், எல்லா சத்தியங்களும் உங்களுக்கு நிச்சயமாக சொல்லப்படும். இவற்றை சேகரித்து கொண்டிருக்கின்றோம். அதுவரை பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது பக்தர்கள், சீடர்கள், அன்பர்கள் அனைவரின் பேராதரவிற்கும் இப்படி கடினமான நேரங்களில் தியான பீடத்திற்கு துணை நிற்பதற்காகவும் எனக்கு துணை செய்வதற்காகவும் மிகுந்த நன்றியோடு வணங்குகிறேன். சில நாட்களில் நாங்கள் செய்திகள் அனைத்தையும் சேகரித்த பிறகு உங்கள் முன்பு எல்லா உண்மைகளையும் திறந்து வைக்கிறேன். நன்றி.

இவ்வாறு நித்யானந்தா சாமியார் பேசியுள்ளார்.

daily thanthi

ஆசிரம சீடர்கள் சென்னை போலீசில் ஓப்புதல் வாக்குமூலம்
நித்யானந்தா மீது 6 வழக்குகள் பதிவு
அனைத்து வழக்குகளும் கர்நாடகத்துக்கு மாற்றம்


சென்னை, மார்ச்.7-

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா சாமியார் இருக்கும் வீடியோ படத்தை நான்தான் ரகசியமாக எடுத்தேன்'' என்று அவரது சீடர் ஒருவர் சென்னை போலீசில் பரபரப்பான வாக்குமூலம் அளித்து இருக்கிறார். இதைத்தொடர்ந்து, நித்யானந்தா மீது 6 வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், அந்த வழக்குகள் அனைத்தும் கர்நாடகத்துக்கு மாற்றப்படும் என்று கூறினார்கள்.


நித்யானந்தா சாமியார்

தமிழகம், கர்நாடகம் மற்றும் பல்வேறு இடங்களில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவர், நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியானது. அவற்றை பார்த்தவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் கருணாநிதியே, இதுபோன்ற அருவருக்கத்தக்க காட்சிகளை தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளிலும் வெளியிடக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.

நித்யானந்தாவை பற்றிய வீடியோ காட்சிகளும், படங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

சீடர் தயாரித்த சி.டி.

இதற்கிடையே, நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற சி.டி.யை தயாரித்தவர் யார்? அந்த படம் எங்கே, யாரால் பதிவு செய்யப்பட்டது? அது உண்மையானதுதானா? என்ற பல சந்தேகங்கள் எழுந்தன. இந்த மர்ம முடிச்சுகளுக்கு விடைதெரியாமல் இருந்தது.

இந்த நிலையில், ``அந்த ரகசிய வீடியோவை எடுத்தது நான்தான்'' என்று நித்யானந்தாவின் முக்கிய சீடரான கே.லெனின் என்ற ஸ்ரீநித்ய தர்மானந்தா கூறி உள்ளார். இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் ஆவார்.


சென்னை போலீசில் புகார்

ஸ்ரீநித்ய தர்மானந்தா சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து நித்யானந்தா மீது புகார் மனு ஒன்றை கொடுத்ததோடு அவரது படுக்கையறை காட்சிகள் அடங்கிய சி.டி. ஒன்றையும் கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

நடிகை ரஞ்சிதா

2004-ம் ஆண்டு முதல் நித்யானந்தரின் மீது எனக்கு பக்தி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 2006-ம் ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள நித்யானந்தா பீட ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வந்தேன். நித்தியானந்தர் தனது ஆசிரமத்துக்கு வரும் அழகான அப்பாவி பெண்களிடம் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்று கூறி, அவர்களை `கோபியர்` என்று கூறி கட்டிப்பிடிப்பார்.

அவரால் கட்டாய ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட சிலர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். ஆசிரமத்தில் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்து உள்ளார். ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்தது.

நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். இதனால் என்னுடைய வாழ்க்கை பாழாக்கப்படுவதாக உணர்ந்தேன். லட்சக்கணக்கான பக்தர்களையும், சீடர்களையும் நித்யானந்தா ஏமாற்றுவதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நாள், நடிகை ரஞ்சிதாவுடன் அவர் உல்லாசமாக இருந்ததை ரகசியமாக படம் எடுத்தேன்.

கொலை மிரட்டல்

இதனால் நித்யானந்தா என்னை மிரட்டினார். 18.2.2010 மற்றும் 19.2.2010 ஆகிய தேதிகளில் சேலம், சீரகப்பாடியில் புதிய ஆசிரமம் திறப்பு விழா நடந்தது. இதற்கு நித்யானந்தர் வந்தார். நானும் அங்கு சென்று இருந்தேன். அப்போது அவர் என்னை தன்னுடைய வேனுக்குள் அழைத்து, ``படம் ஏதாவது எடுத்தாயா?'' என்று கேட்டதோடு என்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். அவருடன் இருந்த சீடர்களும் என்னை மிரட்டினார்கள்.

ஆனால், நான் கழிவறைக்கு செல்வதாக கூறி அவர்களிடம் இருந்து தப்பி விட்டேன். எனவே நித்யானந்தா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை நம்பியுள்ள அப்பாவி இந்துக்களையும், இந்து மக்களையும் அவரிடமிருந்து காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சீடர் தர்மானந்தாவின் புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

6 பிரிவுகளில் வழக்கு

இந்த புகார் மனு தொடர்பாக நித்யானந்தர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் 295ஏ (மதஉணர்வை புண்படுத்தும் செய்கை), 420 (மோசடி), 376 (கற்பழிப்பு), 377 (ஓரினச் சேர்க்கை போன்ற இயற்கைக்கு மாறான உறவு), 506(1) (அச்சுறுத்துதல்) மற்றும் 120 (பி) (சதிக்குற்றம்) ஆகிய இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து சம்பவங்களும் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றதால், இவ்வழக்கு கர்நாடக மாநில காவல்துறைக்கு தமிழக காவல்துறை இயக்குனர் (டி.ஜி.பி) மூலம் மாற்றப்பட இருப்பதாகவும், மேலும் வழக்கு தொடர்பாக கர்நாடக மாநில காவல்துறையினருக்கு அனைத்து உதவிகளையும் தமிழக காவல்துறை செய்யும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கனடா பிரஜை தற்கொலை

நித்யானந்தா சாமியாரின் ஆசிரமத்தில் சீடராக இருந்த சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த தர்மானந்தா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அவர் எப்போது கொடுத்தார் என்பதை சொல்ல முடியாது. அந்த புகாரின் பேரில், 6 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா உல்லாசமாக இருந்ததை தானே ரகசியமாக படமெடுத்ததாக, புகார் அளித்த சீடர் தர்மானந்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறார். அதனை சி.டி.யாக தயாரித்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டு உள்ளார்.

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் பிடாரியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த கனடா பிரஜை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், மேலும் 3 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் வாக்குமூலத்தில் அவர் தெரிவித்து உள்ளார். தர்மானந்தா தனது புகார் மனுவுடன் தான் தயாரித்த சி.டி.யையும் இணைத்து உள்ளார்.

கர்நாடகத்துக்கு மாற்றப்படும்

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்தாலும், இந்த வழக்கு தொடர்பான சம்பவங்கள் அனைத்தும் கர்நாடக மாநிலத்தில்தான் நடைபெற்று உள்ளன. தமிழகத்தில் சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இதனால், இந்த வழக்கை கர்நாடக மாநிலத்துக்கு மாற்ற இருக்கிறோம். இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி.யுடன் நான் பேச இருக்கிறேன். ஏற்கனவே இது பற்றி கர்நாடக டி.ஜி.பி.யிடம், தமிழக டி.ஜி.பி. பேசியுள்ளார். விரைவில் இவ்வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்படும். கர்நாடக மாநிலத்துக்கு தேவையான ஒத்துழைப்பு தரப்படும்.

இந்த வழக்குகள் கர்நாடகத்துக்கு மாற்றப்படும் வரை சென்னை போலீசார் தங்களுக்கு வந்துள்ள 2 புகார்கள் பற்றியும் விசாரணை நடத்துவார்கள். இதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நித்யானந்தாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னையில் இதுவரை வேறு யாரும் சுவாமி நித்யானந்தா மீது புகார் தரவில்லை (அப்போது, நிருபர் ஒருவர் குறுக்கிட்டு; நித்யானந்தாவின் புகைப்படம் மற்றும் வீடியோ படக்காட்சிகள் வெளியானதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக ராஜலட்சுமி என்பவர் புகார் கொடுத்து இருக்கிறாரே? என்று கேட்டதற்கு, அந்த புகார் பற்றி தனக்கு தெரியவில்லை என்றும் அதை பார்த்த பிறகு அது பற்றி தெரிவிப்பதாகவும் கமிஷனர் டி.ராஜேந்திரன் கூறினார்).

எங்கே இருக்கிறார்?

ரஞ்சிதாவுடன் சாமியார் இருப்பது போன்ற வீடியோ படம், கடந்த ஆண்டு (2009) இறுதியில் கர்நாடகத்தில் எடுக்கப்பட்டதாக சீடர் நித்ய தர்மானந்தா தெரிவித்து உள்ளார். அதுபோல் வேறு யாருடனாவது நித்யானந்தா இருக்கும் சி.டி.க்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை.

நடிகை ரஞ்சிதா தற்போது எங்கே இருக்கிறார் என்ற தகவல் எங்களிடம் இல்லை. அதுபோல் இந்த புகாரை கொடுத்த சீடர் தர்மானந்தாவும் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. நித்யானந்தா சாமியாரால் பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் புகார் செய்யலாம்.

சீடர் தர்மானந்தா நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து நித்யானந்தா சாமியார் மீது புகார் அளித்ததாக தெரிகிறது.

---------

2 மணி நேர சி.டி.யை பார்த்தது யார்?

``நித்யானந்தா சாமியார், நடிகை ரஞ்சிதாவுடன் இருக்கும் வீடியோ சி.டி, 2 மணி நேரம் ஓடுவதாகவும், சென்னை பர்மா பஜாரிலோ, வேறு எங்குமோ இந்த சி.டி. கிடைப்பதாக தகவல் ஏதும் இல்லை என்றும் போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரன் பேட்டியின் போது தெரிவித்தார். அப்போது ஒரு நிருபர் குறுக்கிட்டு, ``அந்த சி.டியை நீங்கள் பார்த்தீர்களா'' என்று கேட்டார். அதற்கு, ``நான் பார்க்கவில்லை'' என்று சிரித்தபடியே பதில் அளித்த அவர், ``அந்த சி.டி.யை முழுதாக பார்த்தவர் இவர்தான்'' என்று அருகில் இருந்த மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதரை காட்டினார்.

இதைத் தொடர்ந்து, ``சி.டி.யில் ருசிகர காட்சிகள் இருக்கின்றனவா?'' என்று துணை கமிஷனர் ஸ்ரீதரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ``அது போன்ற காட்சிகள் ஏதும் இல்லை'' என்று அவசர அவசரமாக மறுத்தார். அப்போது அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.

``இதுபோன்ற ஆபாச காட்சிகள் டி.வி., பத்திரிகையில் வெளிவருவதால் பல தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுப்பீர்களா?'' என்று போலீஸ் கமிஷனரிடம் கேட்டதற்கு, பத்திரிகைகளுக்கு சென்சார் கொண்டு வரவேண்டும் என்கிறீர்களா? என கேட்டார்.

சாமியார் நித்தியானந்தாவின் லீலைகளை தொலைக்காட்சிக்கு அனுப்பிய மர்ம பெண் யார்?

சாமியார் நித்தியானந்தாவின் லீலைகளை வீடியோவாக பதிவு செய்து தொலைக்காட்சிகளுக்கு அனுப்பிய பெண் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.


திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சாமியார் நித்யானந்தா. இவர் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற காட்சிகள் வெளியானது. இந்த காட்சிகள் பொய்யானவை என்ற சுவாமி நித்யானந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மார்பிங் முறையில் உருவத்தை மாற்றி இருப்பதாக அவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார்.

ஆசிரமத்தில் பணிபுரிந்த பிரேமானந்தா என்ற லெனின் கருப்பன் மூலம் என் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் இந்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ஆந்திரா கவர்னராக இருந்த என்.டி. திவாரி ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற காட்சி வெளியானது. இவை எல்லாமே பணத்துக்காக திட்டமிட்டு படம் பிடிக்கப்பட்டதாகும்.

அதே பாணியில் நித்யானந்தாவையும் படம் பிடித்து அவரது ஆன்மீக புகழை அழிக்க ஒரு கும்பல் திட்டமிட்டதும் அந்த கும்பல் நித்யானந்தா தியான பீட ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் தெரிய வந்துள்ளது.

ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருக்கும் படுக்கை அறை காட்சிகளை ஒரு பெண் அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சி.டி.க்காக தயாரித்தார் என்றும் அந்த பெண்தான் சென்னையில் உள்ள எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், சாமியாரது சி.டி.க்களை பதிவு தபாலில் அனுப்பி வைத்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

அந்த சி.டி.யுடன் 10 பக்க விளக்கக் குறிப்புகளையும் அந்த பெண் அனுப்பியுள்ளார். அதில் அவர், சுவாமி நித்யானந்தா பல பெண்களுடன் இருக்கும் சி.டி.க்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாராம். அந்த மர்ம பெண் யார் என்பது தெரியவில்லை.

சாமியார் விவகாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நடிகை ரஞ்சிதா கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். இவரும், சாமியாரும் இருப்பது போன்ற காட்சிகளை பார்க்கும் போது, ரஞ்சிதா சினிமா காட்சி போல் சர்வ சாதாரணமாக போஸ் கொடுக்கிறார்.

எனவே ரஞ்சிதா பணத்துக்காக இந்த காட்சியில் நடித்து இருக்கலாம் என்றும் இதற்காக லட்சக்கணக்கில் பணம் கை மாறியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சாமியார் ஆசிரமத்தில் பழைய நடிகை ராகசுதா யோகா கற்று அங்கேயே தங்கி இருந்து பக்தி பிரசங்கம் செய்து வந்தார்.

சாமியாருடன் ஏற்பட்ட மோதலில் ராகசுதா இந்த சி.டி.யை தயாரித்து ஒரு பெண் மூலம் பத்திரிகை மற்றும் டெலிவிஷனுக்கு அனுப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சி.டி.யை அனுப்பிய அந்த பெண் சிக்கினால்தான் இந்த சதி திட்டங்களில் ஈடுபட்டவர்கள் யார், யார் என்பது தெரிய வரும். dinamalar மார்ச் 09,2010,00:00 IST


நித்யானந்தா விவகாரத்தில் அரசியல் பின்னணியா?
பெங்களூரு :"நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ள லெனின் கருப்பன் பின்னணியில், அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் உள்ளனர்' என, பிடதி நித்யானந்தா தியான பீடத்தைச் சேர்ந்த நித்ய சச்சிதானந்தா தெரிவித்தார்.


கடந்த சில நாட்களாக, நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இடம் பெற்றுள்ள வீடியோ காட்சிகளால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இது குறித்து விளக்கமளித்த நித்யானந்தாவின் சீடரான நித்ய சச்சிதானந்தா, நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கடந்த 2ம் தேதி இரவு, நித்யானந்தா குறித்த வீடியோ காட்சிகள் ஒளிபரப்பானது. இதில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த காட்சிகள் அனைத்தும், கிராபிக்ஸ் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டுள்ளது. நித்யானந்தாவின் உருவம் எடிட் செய்யப்பட்டு, இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை நாங்கள் திரட்டி வருகிறோம். நித்யானந்தாவுக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது.இந்த வீடியோ காட்சியை எடுத்துக் கொடுத்ததாக லெனின் கருப்பன், தமிழக போலீசில் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். பிளஸ் 2 வரை மட்டுமே படித்த லெனின் கருப்பனுக்கு தொழில் நுட்பங்கள் தெரியாது. அவருக்கு பின்னணியில், அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் இருந்து இயக்கி உள்ளனர்.


கனடாவைச் சேர்ந்த மெல்வியா டயமண்ட், ஆசிரமத்தில் கொலை செய்யப்பட்டதாக லெனின் கருப்பன் புகார் கூறியுள்ளார். கட்டடத்திலிருந்து கீழே விழுந்ததால் தான், மெல்வியா இறந்துள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.திருச்சி, நவலூர் குட்டப்பட்டு நித்ய பிரபானந்தா என்ற சுரேந்தரை, ஆசிரமத்திற்குள் அடைத்து வைத்திருப்பதாக, அவரது பெற்றோர் கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. ஆனால், தன் விருப்பப்படி தான் ஆசிரமத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த வாசன், தன் சொந்த விருப்பத்தின் பேரில் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அவரை, நல்ல முறையில் அழைத்துச் செல்வதாக அவரது பெற்றோர் எழுதிக் கொடுத்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கிறேன். இதற்காக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்.


தற்போது, ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்ப மேளாவில் கலந்து கொண்டுள்ள நித்யானந்தா, இன்னும் மூன்று நாட்களில் பிடதிக்கு வந்ததும், அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்துவார். இவ்விவகாரத்தில் கர்நாடக அரசும், போலீஸ் துறையும், பொது மக்களும், பக்தர்களும் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களுக்கு எங்கள் நன்றி. ஆசிரமத்தில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு சச்சிதானந்தா கூறினார்.


நித்யானந்தா பணப் பரிவர்த்தனை: சென்னை போலீஸ் விசாரணை :சென்னை: ""சாமியார் நித்யானந்தாவின் பணப் பரிவர்த்தனை குறித்து விசாரித்து வருகிறோம்,'' என, சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:நித்யானந்தாவிற்கு எதிராக பெண்கள் யாரும் கற்பழிப்பு புகார் கொடுக்கவில்லை. நித்யானந்தா மீது புகார் கொடுத்த லெனின் போலீஸ் கட்டுப்பாட்டில் இல்லை. காந்தப்படுக்கை வழக்கில் லெனினுக்கு தொடர்பு இருக்கிறதா என தெரியவில்லை; விசாரிக்கிறோம்.நித்யானந்தா தமிழகத்தில் எங்கெங்கு எப்போதெல்லாம் வந்துள்ளார், எங்கு தங்கினார், அவரது பண பரிவர்த்தனை ஆகியவை குறித்து முதற்கட்ட விசாரணையில் விசாரித்து வருகிறோம். தனிப்படை போலீசார் வெளிமாநிலம் சென்று விசாரிக்கவில்லை.இங்கு தான் விசாரித்து வருகின்றனர். கொலை மிரட்டல் வழக்கை சேலம் போலீசார் விசாரிக்கின்றனர். நித்யானந்தா மீது லெனின் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை கர்நாடக போலீசாருக்கு மாற்ற டி.ஜி.பி.,க்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளேன்.வழக்கு விசாரணை தொடர்பாக, கர்நாடகா மற்றும் சேலம் போலீசாருக்கு சென்னை போலீசார் தேவையான உதவிகளை செய்வர். நித்யானந்தாவுக்கு எதிரான மோசடி வழக்கை சென்னை போலீசார் விசாரிப்பர்.இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

Daily thanthi

நித்யானந்தா மீது புகார் கொடுத்த சீடர் லெனின் கருப்பன் கைது ஆவாரா?
பரபரப்பு தகவல்கள்


சென்னை, மார்ச்.9-

சுவாமி நித்யானந்தா மீது புகார் கொடுத்த அவரது சீடர் லெனின் கருப்பனை கைது செய்யவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் நேற்று பரபரப்பான புகார் மனு கொடுக்கப்பட்டது.

தினந்தோறும் திகில் தகவல்கள்

நித்யானந்தா சாமியோடு நடிகை ரஞ்சிதாவை இணைத்து ஆபாச படங்கள் வெளியானதை தொடர்ந்து தினந்தோறும் இதுபற்றி பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. நித்யானந்தா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல் கொடுத்த புகார் அடிப்படையில், மோசடி வழக்கு ஒன்றும், நித்யானந்தாவின் சீடர் லெனின் கருப்பன் என்ற தர்மானந்தா கொடுத்த புகார் அடிப்படையில் கற்பழிப்பு வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கற்பழிப்பு வழக்கு கர்நாடக மாநில போலீசுக்கு மாற்றப்படும் என்று கமிஷனர் ராஜேந்திரன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

சீடர் மீது புகார்

இந்த நிலையில், நித்யானந்தா மீது புகார் கொடுத்த அவரது சீடர் லெனின் கருப்பன் மீதும் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திடுக்கிடும் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. தமிழக இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் அலுவலக மாநில செயலாளர் குமரவேல் இந்த மனுவை கொடுத்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ள லெனின் ஒரு மோசடி நபர் ஆவார். சேலத்தில் காந்த படுக்கை விவகாரத்தில் பொதுமக்களை ஏமாற்றியவர். ஆசிரமத்தின் தனி அறையில் நடைபெற்ற சம்பவத்தை ரகசியமாக படம் பிடிக்கும் விலை உயர்ந்த அதிநவீன கேமரா லெனினுக்கு எப்படி கிடைத்தது. இதற்காக பின்னணியில் அவருக்கு துணைபுரிந்தவர்கள் யார்?, டிசம்பர் மாதத்தில் பதிவு செய்த வீடியோ படங்களை ஏன் அப்போதே காவல்துறையிடம் கொடுத்து புகார் செய்யவில்லை. மேலும், முதலில் காவல்துறையினரை அணுகாமல் வீடியோ படங்களை செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியது ஏன்?, சேலத்தில் நித்யானந்தா சாமியாரால் மிரட்டப்பட்டதாக சொல்லும் இவர் உடனடியாக ஏன் புகார் செய்யவில்லை. இப்படி அடுக்கடுக்கான சம்பவங்கள் லெனின் மீது எழுந்துள்ளது. அவர் கொடுத்த புகார் மனுவிலும் இந்த சந்தேகங்கள் உள்ளன.

இந்து சமயத்தை அவமானப்படுத்த...

மிரட்டி பணம் பறித்தல், மற்றும் இந்து சமயத்தை அவமானப்படுத்துதல் ஆகியவற்றை உள்நோக்கமாக கொண்டு லெனின் செயல்பட்டுள்ளதாக அறிகிறோம். எனவே, இவர்மீதும் விசாரணை நடத்தி, உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கமிஷனர் பேட்டி

இதற்கிடையில், லெனின் எங்கே இருக்கிறார்?, அவர் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளாரா? என்பது பற்றி கமிஷனர் ராஜேந்திரனிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த கமிஷனர் ராஜேந்திரன், லெனின் புகார் கொடுத்ததோடு சரி, அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது தெரியாது. போலீஸ் கட்டுப்பாட்டில் அவர் இல்லை என்று தெரிவித்தார்.

லெனின் மீது காந்த படுக்கை மோசடி வழக்கு உள்ளதா? என்று கேட்டபோது, `எனக்கு அதுபற்றி தெரியவில்லை. இப்போதுதான் நீங்கள் கேட்கிறீர்கள். அதுபோன்ற வழக்கு உள்ளதா' என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கேட்பதாக கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

நித்யானந்தா மீது எந்தப் பெண்ணும் கற்பழிப்புப் புகார் கொடுக்கவில்லை - கமிஷனர் செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010, 11:59[IST]

சென்னை: நித்தியானந்தா மீது இதுவரை எந்தப் பெண்ணும் கற்பழிப்புப் புகார் கூறவில்லை என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நித்யானந்தா மீதான கற்பழிப்பு வழக்கு கர்நாடக போலீசுக்கு மாற்றப்படுகிறது. இதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளேன். நித்யானந்தா மீதான மோசடி வழக்கை நாங்கள் தான் விசாரிப்போம். கற்பழிப்பு வழக்கில் கொலை மிரட்டல் சட்டப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் சட்டப்பிரிவில் கர்நாடக போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உதவி செய்வோம். கொலை மிரட்டல் சம்பவம் சேலத்தில் நடைபெற்றுள்ளது. நித்யானந்தா மீது அவரது சீடர் லெனின் கொடுத்த புகார் அடிப்படையில் கற்பழிப்பு வழக்கு போட்டுள்ளோம். அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இதுவரை புகார் கொடுக்கவில்லை. நித்யானந்தா பற்றி விசாரிக்க வெளிமாநிலங்களுக்கு இதுவரை தனிப்படை போலீசார் அனுப்பப்படவில்லை. நித்யானந்தா சென்னைக்கு வரும்போது எங்கெங்கு தங்குவார், யார், யார் அவரை சந்திப்பார்கள், யார், யாரோடு அவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது, அவரது பண பரிவர்த்தனை எப்படி நடைபெற்றது என்பது பற்றி இப்போது பூர்வாங்க விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. மோசடி வழக்கு தொடர்பாக நித்யானந்தாவை கண்டிப்பாக விசாரிப்போம். கர்நாடக போலீசுக்கு, தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. மேற்பார்வையில் இந்த வழக்கில் தமிழக போலீசார் அனைத்து உதவிகளையும் செய்வார்கள் என்றார். லெனின் கருப்பனுக்குத்தான் சிக்கல்? இதற்கிடையே, நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருப்பதைப் போன்ற காட்சிகளை வீடியோவில் படம் பிடித்த அவரது சீடர் லெனின் கருப்பன் என்கிற நித்ய தர்மானந்தாவைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளது. தமிழக இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் அலுவலக மாநில செயலாளர் குமரவேல் இந்த மனுவை கொடுத்தார். அதில், நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ள லெனின் ஒரு மோசடி நபர் ஆவார். சேலத்தில் காந்த படுக்கை விவகாரத்தில் பொதுமக்களை ஏமாற்றியவர். ஆசிரமத்தின் தனி அறையில் நடைபெற்ற சம்பவத்தை ரகசியமாக படம் பிடிக்கும் விலை உயர்ந்த அதிநவீன கேமரா லெனினுக்கு எப்படி கிடைத்தது. இதற்காக பின்னணியில் அவருக்கு துணைபுரிந்தவர்கள் யார்?, டிசம்பர் மாதத்தில் பதிவு செய்த வீடியோ படங்களை ஏன் அப்போதே காவல்துறையிடம் கொடுத்து புகார் செய்யவில்லை. மேலும், முதலில் காவல்துறையினரை அணுகாமல் வீடியோ படங்களை செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியது ஏன்?, சேலத்தில் நித்யானந்தா சாமியாரால் மிரட்டப்பட்டதாக சொல்லும் இவர் உடனடியாக ஏன் புகார் செய்யவில்லை. இப்படி அடுக்கடுக்கான சம்பவங்கள் லெனின் மீது எழுந்துள்ளது. அவர் கொடுத்த புகார் மனுவிலும் இந்த சந்தேகங்கள் உள்ளன. மிரட்டி பணம் பறித்தல், மற்றும் இந்து சமயத்தை அவமானப்படுத்துதல் ஆகியவற்றை உள்நோக்கமாக கொண்டு லெனின் செயல்பட்டுள்ளதாக அறிகிறோம். எனவே, இவர்மீதும் விசாரணை நடத்தி, உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. லெனின் எங்கே...? இதற்கிடையே கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து, அவரிடம் நித்தியானந்தா தொடர்பான புதிய வீடியோவைக் கொடுத்துத புகார் செய்த லெனின் கருப்பன் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் போலீஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கமிஷனர் ராஜேந்திரனிடம் கூறுகையில், லெனின் புகார் கொடுத்ததோடு சரி, அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது தெரியாது. போலீஸ் கட்டுப்பாட்டில் அவர் இல்லை. காந்தப் படுக்கை மோசடி குறித்து எனக்குத் தெரியவில்லை. இப்போதுதான் நீங்கள் கேட்கிறீர்கள். அதுபோன்ற வழக்கு உள்ளதா என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் விசாரிக்கிறேன் என்றார் ராஜேந்திரன்.

மறக்காம வோட்டுப் போடுங்க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக