சிறந்த வருமான வாய்ப்பு

இது தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்.

உங்கள் வீட்டுக்கு மாதம் ரூ.1000-க்கு குறையாமல் மளிகைப் பொருட்கள் வாங்குங்கள், ரூ.250 சேமியுங்கள். அத்துடன் சிறந்த வருமான வாய்ப்பையும் பெறுங்கள்.

அலைபேசி-9043584331

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

அணு விபத்து இழப்பீடு மசோதா – என்னதான் நடந்தது?

அமெரிக்கா, இந்தியா இடையே 2008ல் ஏற்பட்ட சிவில் அணு ஒப்பந்தத்தை அமல்படுத்த, அணு உலை விபத்து இழப்பீடு மசோதாவை இந்தியா நிறைவேற்ற வேண்டும். அதன்படி, நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் 8ம் தேதி இந்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில் உள்ள பல்வேறு அம்சங்கள் இந்தியாவுக்கு பாதகமாக இருப்பதாக பா.ஜ., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அணு சக்தி நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்படும் மக்களுக்கு இழப்பீடு அளிப்பதற்காக ரூ.500 கோடி முன்வைப்பு தொகையை செலுத்த வேண்டும் என்று மசோதாவில் கூறப்பட்டு இருக்கிறது. மேலும், அணு சக்தி நிலையம் அமைப்பதற்கான மூலப்பொருட்களை சப்ளை செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த மசோதாவில் சேர்க்கப்படாமல் உள்ளன.

ஆகவே நம் நாட்டு மக்களின் நலன் காக்கும் பொருட்டு இந்த இரண்டு அம்சங்களையும் திருத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதாவது, ரூ.500 கோடி முன்வைப்புத் தொகையை ரூ.1,500 கோடியாக உயர்த்த வேண்டும் என்றும், அணு நிலையம் அமைப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களையும், உற்பத்தியாளர்களையும் இந்த மசோதாவின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளிக்கப்படும் வரை, அணு உலை செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும் கூறின.

இதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு இம்மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பியது. காங்கிரஸ் எம்.பி. சுப்பிராம ரெட்டி தலைமையிலான நிலைக்குழு இதை ஆராய்ந்து சமர்பித்த அறிக்கை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை இந்தியாவே நிறைவேற்றுவதால், நம் நாட்டின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இது இருக்க வேண்டும் என்று நிலைக்குழுவின் அறிக்கையில் ஒருமனதாக கூறப்பட்டு உள்ளது.

அணுவிபத்து நஷ்ட ஈட்டு மசோதாவில் எதிர்க்கட்சிகள் கேட்டபடியே திருத்தங்களைச் செய்த அரசு, அத்துடன் புதிய பிரிவைச் சேர்த்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளையே நீர்த்துப் போகச் செய்துவிட்டது.

அணுஉலைகளிலோ நிலையங்களிலோ விபத்து நேரிட்டால் அவற்றை தயாரித்து, விற்பனை செய்த வெளிநாட்டு நிறுவனங்கள்தான் பொறுப்பு என்கிற நிபந்தனையில், வேண்டுமென்றே தரக்குறைவான கருவிகளையும் பாகங்களையும் அவர்கள் விற்பனை செய்திருந்தால் மட்டுமே அவர்களைப் பொறுப்பாகக் கருதி நஷ்ட ஈடு பெற வேண்டும் என்று புதிய திருத்தம் தெரிவிக்கிறது.

அதாவது அணு உலைகளில் விபத்த நடந்தால் அத்தகைய விபத்து நடக்கவேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் அணு உலை சாதனத்தை வழங்கிய அன்னிய நிறுவனம் செயல்பட்டுள்ளது என்பதை நிரூபித்தால் மட்டுமே அதனிடம் இழப்பீடு கோரமுடியும் என்கிறது.

அத்துடன் அணுமின் நிலையங்கள் அரசு நிறுவனங்களாகத் தொடங்கப்படுவதால் நஷ்ட ஈட்டை அளிக்கும் பொறுப்பை அரசு ஏற்கிறது என்றும் திருத்தப்பட்ட மசோதாவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பிற்காலத்தில் இந்த அணுமின் நிலையங்களில் உள்ள அரசின் பங்கு தனியாருக்கு விற்கப்படமாட்டாது என்று எந்தவித உத்தரவாதமும் தரப்படவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

நாட்டை அமெரிக்க அணு உலை முதலாளிகளிடம் அடகு வைக்க காங்கிரஸ் அரசாங்கம் வேகமாக வரிந்துக் கட்டிய போதும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் இந்த திருத்தத்தை நீக்க மத்திய காங்கிரஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

அதன் படி Aug 26,2010 அன்று மசோதாவை தாக்கல் செய்து விட்டார்கள்.

மறக்காம வோட்டுப் போடுங்க


2 கருத்துகள்:

அரிஅரவேலன் (Ariaravelan) சொன்னது…

செய்தியைத் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள், பாராட்டுகள்!

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி அரிஅரவேலன்.

கருத்துரையிடுக